பிரிட்டன் ; போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்!

பிரிட்டன் ; போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டார்!

ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி 326 இடங்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றது. மீண்டும் பிரதமர் ஆக பதவியேற்க உள்ள போரிஸ் ஜான்சனுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்தார்.

பிரிட்டனில், பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேறுவது தொடர்பாக, போரிஸ் ஜான்சன் உருவாக்கிய பிரெக்ஸிட் ஒப்பந்தத்திற்கு, பார்லி.,யில் ஒருமித்த ஆதரவு கிடைக்க வில்லை. அதனால், ஏற்கனவே அறிவித்தபடி, அக்., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து பிரிட்டன் வெளியேற முடியவில்லை. இதன் காரணமாக, பார்லி.,யை கலைத்து விட்டு, முன்கூட்டியே தேர்தல் நடத்துவதாக, போரிஸ் ஜான்சன் அறிவித்தார்.அதன்படி, நேற்று 650 இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு, ஓட்டுக்கள் எண்ணப்பட்டு வருகின்றன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில், ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி 368 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப் பட்டிருந்தது. முக்கிய எதிர்க்கட்சியான ஜெரமி கார்பினின் தொழிலாளர் கட்சி 191 இடங்களை கைப்பற்றும் என வாஷிங்டன் போஸ்ட் கருத்து தெரிவித்திருந்தது.

பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நிறைவேற்ற போரிஸ் ஜான்சன் அரசுக்கு 322 இடங்கள் தேவை. ஆனால் 326 இடங்களைப் பெற்று மெஜாரிட்டி பெற்றது.கருத்துகணிப்புக்களின்படி பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி தொடர்ந்து, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து தேர்தலில் தனது தொழிலாளர் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக ஜெரமி கார்பின் அறிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளதால் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம், பார்லி.,யில் மீண்டும் நிறைவேற்றப்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2020, ஜன., 31ல், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து, பிரிட்டன் வெளியேற வழி பிறந்துள்ளது.

Related Posts

error: Content is protected !!