’லெஜெண்ட்’ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஹீரோ – ஆக பூஜை போட்டாச்சு! – AanthaiReporter.Com

’லெஜெண்ட்’ சரவணா ஸ்டோர்ஸ் சரவணன் ஹீரோ – ஆக பூஜை போட்டாச்சு!

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ‘லெஜெண்ட்’ சரவணன் நாயகனாக அறிமுகமாகும் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியுள்ளது. இன்று சிம்பிளாக பூஜை போடப்பட்ட படத்தை அஜித் படங்களை இயக்குகிறார்கள், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, இரண்டு கதாநாயகிகள் ஜோடி சேருகிறார்கள்.

சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் முதலில் தங்கள் நிறுவன விளம்பரப் படங்களில் நடித்து வந்தார். அந்தக் கடையைவிடவும், அதற்காக எடுக்கப்பட்ட விளம்பரம் அதிக அளவில் பேசப்பட்டது. காரணம், அந்த விளம்பரத்தில் முன்னணி நடிகைகளான ஹன்சிகா, தமன்னாவுடன் சரவணா ஸ்டோர்ஸின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தார். அந்த விளம்பரத்துக்கு இணையத்தில் நல்ல ரீச் கிடைத்தது. சரவணன் அருள், அடுத்தடுத்த விளம்பரங்களில் புதுப்புது கெட்டப்புகளில் வந்து அசத்தினார். கொஞ்சம் நடனமும் ஆடினார். அப்போதே அவர் தியுரையுலகில் நடிகராக விரைவில் அறிமுகமாக உள்ளார் என்று கூறப்பட்டது. அவருக்கு ஜோடியாக ஹன்ஷிகா மோத்வானி நடிக்க உள்ளதாகவும் தகவல் பரவியது.

இந்நிலையில் அஜித் பட இயக்குநரின் இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் ‘லெஜெண்ட்’ சரவணனின் திரைப்பயணம் அட்டகாசமாய்த் துவங்கியே விட்டது.

முன்பு சரவணன் நடித்த விளம்பர படங்களை இயக்கிய, இரட்டை இயக்குனர் களான ஜேடி-ஜெர்ரி இந்தப் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் முன்பு விக்ரம், அஜீத் நடித்த உல்லாசம், விக்ரமா தித்யா, ஷெரின் நடித்த விசில் ஆகிய படங்களை இயக்கியவர்கள் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந்தப்படத்தில் சரவணனுக்கு கதாநாயகியாக ‘மிஸ் இந்தியா’ பட்டம் பெற்ற வட இந்திய மாடல் கீத்திகா திவாரி நடிக்க இருக்கிறார். முக்கிய வேடங்களில் பிரபு மற்றும் விவேக் ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை வேல் ராஜ் கவனித்துக் கொள்கிறார். பேண்டஸி ஜானரில் எடுக்கபப்டும் இந்தப் படத்தை, ஹீரோவாக நடிக்கும் சரவணனே தயாரிக்கிறார்.

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை வடபழனி ஏ.வி.எம் ஸ்டூடியோவில் ஞாயிறன்று தொடங்கியது. மூத்த இயக்குநர் எஸ்.பி முத்துராமன் முதல் கிளாப் அடித்து படத்தை தொடங்கி வைத்தார். இதற்கிடையே, படத்தின் ஷூட்டிங் சென்னை, பொள்ளாச்சி, இமயமலைப் பகுதிகளில் நடக்கும் என அறிவித்துள்ள படக்குழு, இந்தப் படத்தின் முக்கியமான கேரக்டரில் இன்னொரு பாப்புலர் ஹீரோயின் நடிக்கவுள்ளார் என்றும் டீம் அறிவித்துள்ளது.