கொடூர குற்றவாளிகளின் கருணை மனுக்களை வாங்கி அக்குளில் வைக்கும் போக்கு!

கொடூர குற்றவாளிகளின் கருணை மனுக்களை வாங்கி அக்குளில் வைக்கும் போக்கு!

இந்த முடிவு எடுப்பது.. கண்றாவியான சமாச்சாரம்..கோவையில் இரு பள்ளி குழந்தைகளை கடத்தி அதில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இரட்டை கொலை செய்த மனோகரனுக்கு மகளிர் நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது.

இதனை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தன.வரும் 2ம் தேதி மனோகரனை தூக்கிலிட ஏற்பாடும் நடைபெற்று வந்தன.

இப்போது ஆளுநரிடம் கருணை மனு சமர்ப்பிக்க 6 வாரம் அவகாசம் கேட்டு உள்ளதால் தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என்று குற்றவாளி தரப்பில் கோரிக்கை.

சென்னை உயர்நீதிமன்றம் இதனை ஏற்றுக்கொண்டு தூக்கு தண்டனை நிறைவேற்றத்திற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

தூக்கு தண்டனை கைதிகள் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள கருணை மனுக்களை சமர்ப்பிக் கலாம் என்பது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட உரிமை. அதனை மறுப்பதற்கில்லை.

ஆனால் இதுபோன்ற கொடூர குற்றவாளிகளின் கருணை மனுக்களை வாங்கி அக்குளில் வைத்துக் கொண்டு தூங்கிய ஆளுநர்களையும் ஜனாதிபதிகளையும் நாம் நிறையவே பார்த்துள்ளோம் என்பதுதான் வேதனையான விஷயம்.

என்னமோ தினமும் இது மாதிரி கருணை மனுக்கள் வந்து குவிவது போலவும் அதனால் முடிவெடுக்க முடியாமல் திணறுவது போலவும் அவர்களுக்கு மனதில் நினைப்பு.

தூக்கு தண்டனை விதிக்கலாமா வேண்டாமா என்று உடனே சொல்ல துப்பில்லாத இவர்கள், முடிவை எடுக்க அரசியல் சாசன சட்டப்படி காலக்கெடு எதுவும் நிர்ணயம் இல்லை. அதனால் இவர்களை யாரும் தட்டிக் கேட்கவும் முடியாது.

கோவை சிறுவன் சிறுமி துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டு தீர்ப்பு வருவதற்கே 9 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இனி கும்பகர்ணன்களிடம் அடுத்தடுத்து கருணை மனுக்கள்.. எவ்வளவு நாள் போகுமோ?

எத்தனையோ இக்கட்டான நேரங்களில் ஒரு சாமானியன் கூட உடனடியாக முடிவெடுத்து போய்க்கொண்டே இருக்கிறான்.. சாமானியன் இடம் இருக்கும் யோக்கியதை கூட அரசியல் சாசன அமைப்புகளின் மீது அமர்ந்திருப்பவர்களுக்கு இல்லை என்பது தான் எவ்வளவு பரிதாபம்..

error: Content is protected !!