காஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்!

காஷ்மீரில் வரும் திங்கள் முதல் போஸ்ட்- பெய்ட் மொபைல் சேவை தொடங்கும்!

மோடி அரசால் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது முதல் ஜம்மு காஷ்மீரில் ஆங்காங்கே சில சம்பவங்கள் நடந்தாலும் காஷ்மீரில் போஸ்ட்-பெய்ட் மொபைல் தொலைபேசி சேவைகள் திங்கள் மதியம் 12 மணி முதல் மீண்டும் தொடங்கும் என ஜம்மு காஷ்மீர் திட்ட முதன்மை செயலர் ரோஹித் கன்சல் தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதையடுத்து 69 நாட்களாக அங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. தொலைபேசி சேவைகள் முடக்கத்தினால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் 70 லட்சம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதாக கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு கட்டத்தில் பி.எஸ்.என்.எல். சேவைகளை மட்டும் அனுமதிக்கத் திட்டமிடப்பட்டது, பிறகு தனியார் தொலைபேசி சேவைகளில் இன்கமின் அழைப்புகளுக்கு மட்டும் அனுமதியளிக்கலாம் என்று பரிசீலிக்கப்பட்டது.

இந்நிலையில் சுமார் 40 லட்சம் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் திங்கள் முதல் இந்த வகை சேவைக்கு அனுமதியளிக்க முடிவெடுக்கப்பட்டது, ஆனால் 26 லட்சம் பிரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு எப்போது சேவை தொடங்கும் என்பது தெரியவில்லை.

ஆனால் இணையதளச் சேவை தொடங்க இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்கும் அரசின் அறிவிக்கையைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் பெய்ட் தொலைபேசி சேவைகள் தொடங்கவுள்ளன.

லேண்ட் லைன் தொலைபேசி சேவைகள் ஆகஸ்ட் 17ம் தேதி பகுதியளவில் தொடங்கப்பட்டன. செப்டம்பர் 4ம் தேதி அனைத்து லேண்ட் லைன் இணைப்புகளும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

Related Posts

error: Content is protected !!