கூவம் விவகாரம் : 100 கோடி அபராதம் என்பது எச்சரிக்கைதான் – சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

கூவம் விவகாரம் : 100 கோடி அபராதம் என்பது எச்சரிக்கைதான் – சுப்ரீம் கோர்ட் விளக்கம்!

சென்னையின் அடையாளமான கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை மட்டுமே செய்தது என்றும், அபraatham  விதிக்கவில்லை என்று சுப்ரீம் கோர்ட் விளக்கம் அளித்துள்ளது பல தரப்பிலும் கேலிச் சிரிப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள கூவம், அடையாறு, பங்கிங்காம் கால்வாய் உள்ளி நீர்நிலைகளை பராமரிக்க தமிழக அரசு தவறிவிட்டதாக ஜவஹர்லால் சண்முகம் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாயைத் தூர்வாரிப் பராமரிக்காமல் விட்டதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட காரணமான பொதுப்பணித்துறைக்கு ரூ.100 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவு இட்டது. அத்துடன் ஏப்ரல் 23 ஆம் தேதி நேரில் ஆஜராக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்திய நாதனுக்கு உத்தரவிட்ட பசுமை தீர்ப்பாயம் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஆராயவும், மறுசீரமைப்பு நடவடிக்கைகளைக் கண்காணிக்கவும் உத்தரவிட்டது.

மேலும் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள், இந்திய அறிவியல் கழகம், நீரி அமைப்பு, மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எக்கனாமிக்ஸ் ஆகிய நிறுவனங்களிடமிருந்து, தலா ஒருவர் அடங்கிய குழுவை நியமித்து, 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது. அபராத உத்தரவை எதிர்த்து தமிழக பொதுப்பணித்துறை தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூவம், அடையாறு மற்றும் பக்கிங்ஹாம் கால்வாயை பராமரிக்க மேற்கொண்ட நடவ டிக்கைகளை கருத்தில் கொள்ளாமலும், கூவம் நதியை சுத்தப்படுத்த ரூ.604 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடந்து வருவதை கருத்தில் கொள்ளாமலும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தமிழக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மேலும், இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ரூ. 100 கோடி அபராதம் விதித்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்திருந்தனர்.

இதனை அடுத்து, இந்த வழக்கில் கடந்த ஜூலை மாதம் இறுதி விசாரணை நடத்தது. அப்போது நீதிபதிகள் ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி தமிழக அரசு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ஐகோர்ட் தள்ளுபடி செய்ததை அடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு முறை யிட்டது.இந்த மனு இன்று திங்கள்கிழமை நீதிபதி ரோஹிண்டன் நாரிமன் தலைமை அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூவம் ஆற்றை மாசுபடுத்தியதாக தமிழக அரசுக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை மட்டுமே செய்தது என்றும், அபதாரம் விதித்து உத்தரவிடப்படவில்லை என்று விளக்கம் அளித்த நீதிபதிகள் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.

இதை அடுத்து தீர்ப்பை சரியாக படிக்காத தமிழக அரசு வக்கீல் மேதைகளை கூவத்துடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

error: Content is protected !!