போக்குவரத்து விதி மீறல்-அபராதம் அபாரமாக அதிகரிப்பு! – AanthaiReporter.Com

போக்குவரத்து விதி மீறல்-அபராதம் அபாரமாக அதிகரிப்பு!

தமிழக போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்து விதிமுறைகளை மீறி நடப்போரிடம் வசூலிக்கப்பட்டும் அபராதத் தொகையை உயர்த்தியுள்ளனர்.

இருசக்கர வாகன ஓட்டிகள், நான்கு சக்கர வக ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் என பலதரப்பட்டவர் கள் சாலை விதிகளை முறையாக கடைபிக்காததாலும், போக்குவரத்து விதி மீறல்களில் ஈடு படுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதங்கள் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாததலும், விபத்துக் களுக்கும், உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா 2019 அரசால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த புது விதிமுறையின் படி:

மது அருந்திவிட்டு ஓட்டினால் – 10 ஆயிரம் அபராதம்

ஓட்டுநர் உரிமமம் இல்லாமல் ஓட்டினால் – 5 ஆயிரம் அபராதம்

தலைக்கவசம் அணியாமல் ஓட்டினால் – 1000 மற்றும் 3 மாதங்களுக்கு ஓட்டுநர் உரிமம் தகுதி இழைப்பு செய்யப்படும்.

பொது சாலைகளில் ரேஸில் ஈடுபட்டால் – 5 ஆயிரம் அபராதம்

இருசக்கர வாகனத்தில் அதிக நபர்களை ஏற்றிச் சென்றால் – ரூ. 2 ஆயிரம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமம் 3 மாதங்களுக்கு தகுதியிழப்பு செய்யப்படும்.

காரில் சீட்பெல்டு அணியாமல் ஓட்டினால் – 1000 அபராதம்

ஓட்டுநர் உரிமத்தை தகுதி இழப்பு செய்த பின்பு வாகனம் ஓட்டுவோரிடம் ரூ. 10 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்படும்.

சாலை ஒழுங்குமுறை விதிகளை மீறதலுக்கு வசூலிக்கப்படும் அபராதத் தொகை ரூ. 500-ஆக உயர்த்தப்படுகிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் அபராதத் தொகை மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உருவாக்கவில்லை. அதை, கருத்தில் கொண்டு தமிழக போக்குவரத்து காவல்துறை அபராதத் தொகையை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.