A.V.மெய்யப்பன் என்னும் ஏவிஎம் செட்டியார்! – AanthaiReporter.Com

A.V.மெய்யப்பன் என்னும் ஏவிஎம் செட்டியார்!

அவிச்சி மெய்யப்ப செட்டியார் இதே 28-7 (1907ல்)தான் பிறந்தவர். A.V.மெய்யப்பன் என்றும்,AVM என்றும் பின்னாளில் அறியப்பட்டவர்.தமிழ்த் திரைப்பட மும்மூர்த்திகள் என வாசன், எல்.வி. பிரசாத், மெய்யப்பன் ஆகியோர் போற்றப்பட்டனர்.

சினிமா தயாரிப்பாளர்,இயக்குநர், சமுக சேவகர் என போற்றப்பட்ட ஏ.வி.எம்., உருவாக்கிய ஸ்டூடியோ மட்டுமே..மூன்று பரம்பரை கடந்தும் வெற்றிகரமாக நடந்துக் கொண்டிருக்கிறது. இது வரை தமிழ்,தெலுங்கு,கன்னடம்,ஹிந்தி என நான்கு மொழிகளிலும் படம் எடுத்த ஒரே நிறுவனமாய் திகழ்கிறது.

காரைக்குடியில் பிறந்த மெய்யப்பன் சென்னை வந்து சரஸ்வதி ஸ்டோர்ஸ் என்னும் கிராமபோன் கம்பெனியை ஆரம்பித்தார்.பின் அதையே சரஸ்வதி சவுண்ட் புரடக்க்ஷன்ஸ் கம்பெனி ஆக்கி அல்லி அர்ஜுனா,பூகைலாஷ்,ரத்னாவளி ஆகிய படங்களை எடுத்தார்.அவை எல்லாம் தோல்வியடைந்தன.

பின் இப்போதைய மந்தைவெளியில் ..பிரகதி ஸ்டூடியோ ஆரம்பித்தார்.என் மனைவி, ஹரி சந்திரா,ஸ்ரீவள்ளி ஆகிய படங்கள் எடுத்தார்.

ஆனால் 1941ல் சபாபதி என்ற படம் மாபெரும் வெற்றியை பெற்று தந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,காளி என்.ரத்தினம் நடித்த இந்த படம்..இன்றும் டி.வி.,யில் ஒளி பரப்பப்படும் போது பெரும் ஆதரவை பெறுகிறது.நல்ல நகைச்சுவை படம்.

பின் 1945ல் ஏ.வி.எம்., ஸடூடியோ பிறந்தது.காரைக்குடிக்கு ஸ்டூடியோ இரண்டாம் உலகப் போர் போது மாற்றப்பட்டு..பின் மீண்டும் வடபழனியில் இன்றுள்ள இடத்திற்கு மாற்றபட்டது.

1947ல் நாம் இருவர்,1948ல் வேதாள உலகம்,1949ல் வைஜயந்திமாலா அறிமுகத்துடன் வாழ்க்கை ஆகிய படங்கள் வெளியாயின. வாழ்க்கை தெலுங்கில் ஜீவிதம் என்றும், ஹிந்தியில் பாஹர் என்றும் வந்து வெற்றி பெற்றது.

அதற்கு பின் பிரபல தயாரிப்பு நிறுவனமாகி..பல வெற்றி படங்களை தயாரித்துள்ளது ஏ.வி.எம்.,

தமிழ்த் திரையுலகின் முதல் பின்னணிப் பாடகர்களை அறிமுகப்படுத்திவர், இந்தியாவின் முதல் மொழிமாற்றத் திரைப்படத்தைத் தயாரித்தவர் போன்ற பெருமைகளைப் பெற்றவர்.

தமிழ்நாட்டின் ஐந்து முதல்வர்களுடனும் திரைத்துறையில் பணியாற்றிய பெருமையும் இவரையே சாரும். நாம் இருவர் திரைப்படத்திற்கு அண்ணாதுரை கதை எழுதினார். பராசக்தி திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதினார். அன்பே வா திரைப்படத்தில் எம். ஜி. ஆரும், மேஜர் சந்திரகாந்த் திரைப்படத்தில் ஜெயலலிதாவும் நடித்திருந்தனர்.

இவரது திரைத்துறைப் பணிக்காலத்தில் டி.ஆர். மகாலிங்கம், வைஜெயந்திமாலா, சிவாஜி கணேசன், கமஹாகாசன், மேஜர் ஆகியோரை அறிமுகப்படுத்தியவரும் இவரே.

குறிப்பாக பராசக்தி (சிவாஜி, எஸ்.எஸ்.ஆர்., அறிமுகம்)அந்த நாள்,களத்தூர் கண்ணம்மா (கமல் அறிமுகம்),அன்னை, அன்பே வா, சர்வர் சுந்தரம் என வெற்றி தொடர்ந்தது.

இப்பேர்பட்ட ஏ.வி.எம்., 1979 ல் அமரரானார்.