AanthaiReporter.Com

பஞ்சாப் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ராகுல் காந்திக்கு அனுப்பிய தனது ராஜினாமா கடிதத்தின் நகலை பகிர்ந்துள்ளார்.

மக்களவை தேர்தல் தோல்விக்கு பின்னர், பஞ்சாப் மாநிலத்தில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்ட போது, நவ்ஜோத் சிங் சித்துவிடமிருந்து உள்ளாட்சித்துறை பறிக்கப்பட்டு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வழங்கப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த சித்து, அமைச்சரகப் பணிகளில் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்து வந்தார். பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங், எரிசக்தித்துறை குறித்து நடத்திய கூட்டத்திலும் அமைச்சர் நவ்ஜோத் சிங் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் தான் தனது அமைச்சர் பதவியை ராஜினாம செய்ய உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள நவ்ஜோத் சிங் சித்து, முதலமைச்சருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்ப உள்ளதாக தெரிவித்துள்ளார்.