AanthaiReporter.Com

இந்த விழாவில் பேசிய பாடகர் மதுபாலகிருஷ்ணன், “இந்த படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, பெங்காலி என ஐந்து மொழிகளில் இந்த படத்துக்காக என்னை பாட வைத்திருக்கிறார்கள். பெங்காலியில் நான் பாடிய முதல் பாடல் இந்த படத்துக்காக தான்” என்றார்

பாடலாசிரியர் முத்தமிழ் பேசும் போது, “இந்த படத்தில் 3 பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒரு பையனுக்கும், நாய்க்கும் இடையேயான அன்பை சொல்லும் படம், குழந்தைகளின் உலகத்தில் இருந்து பாடல்களை எழுதியிருக்கிறேன், குழந்தைகளுக்கு இந்த படம் நிச்சயம் பிடிக்கும்”என்றார்

மாட்டுக்கார வேலன், ராமன் தேடிய சீதை போன்ற தமிழ் சினிமாவில் சாதனை புரிந்த படங்களை தயாரித்தது நடராஜன் நிறுவனம். அவர் மிகவும் துணிச்சலான, ரசனையான தயாரிப்பாளர். இயக்குனர் பிரதீப் மிக ஆழமான சிந்தனை கொண்ட, கடின உழைப்பாளி, அவரின் நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படத்தை தர வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தயாரித்திருக்கிறார்கள் என்றார் சித்ரா லக்‌ஷ்மணன்.