ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதலமைச்சர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு!

ஆந்திர மாநிலத்தில் 5 துணை முதலமைச்சர்கள் உட்பட 25 அமைச்சர்கள் பதவியேற்பு!

இந்திய வரலாற்றில் முதல் முறையாக  ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் அமைச்சரவை யில் இன்று 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர்.  தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள 5 துணை முதலமைச்சர்களும் எஸ்.சி., எஸ்.டி., பழங்குடி, ஓபிசி மற்றும் மைனாரிடிட்டி என ஒவ்வொரு வகுப்பை சேர்ந்தவர்கள் இடம்பெற்றுள்ளார்கள்.ஆட்சியிலும், கட்சியிலும் அனைவரும் சமம் என்பதை காண்பிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஜெகன் தெரிவித்துள்ளார்.

ஆந்திரா வில் நடந்துமுடிந்த தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 151 சட்டப்பேரவை தொகுதி களில் வெற்றிபெற்றது. இதில் ஆந்திர முதல்வராக கடந்த 30ம் தேதி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெகன்மோகன் பதவியேற்றார். இதனை தொடர்ந்து அவரது அமைச்சரவையில் பங்கேற்கும் 25 அமைச்சர்களின் பெயர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இதில், தர்மன்ன கிருஷ்ணதாஸ் (நரசன்னபேட்டா தொகுதி), மேக்கப்பாட்டி கவுதம் ரெட்டி (ஆத்மக் கூறு) நெல்லூர், அனில் குமார் யாதவ் (நெல்லூர்), பெத்திரெட்டி ராமச்சந்திர ரெட்டி (புங்கனூர்-சித்தூர் மாவட்டம்), நாராயணசாமி (கங்காதர நெல்லூர்-சித்தூர் மாவட்டம்), அஞ்சாது பாஷா கடப்பா, சங்கரநாராயண (பெனுகொண்டா) அனந்தபுரம், புக்கண்ண ராஜேந்திரநாத் (டோன்) கர்னூல், கும்மனூரு ஜெயராம் (ஆளூர்) என மொத்தம் 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அமைச்சராக அறிவிக்கப்பட்டவர்கள் இன்று காலை 11.30 மணியளவில் அமராவதி யில் உள்ள தலைமை செயலகத்திற்கு சென்று பதவியேற்றனர். அவர்களுக்கு கவர்னர் நரசிம்மன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் 5 துணை முதல்வர்களும் அடக்கம். தற்காலிக சபா நாயகராக தம்மினேனி சீதாராம் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் அவர் எம்எல்ஏகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னதாக முதல்வர் ஜெகன்மோகன் தலைமை செயலகத்திற்கு முதன்முறையாக சென்றார். அங்கு சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் நாற்காலியில் அமர்ந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் முதல் கையெழுத்தாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் உதவியாளர்களுக்கு ரூ.3000த்தில் இருந்து ரூ.10000 ஆக்குவது தொடர்பான முதல் கையெழுத்தை போட்டார். தொடர்ந்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தலைமையிலான அமைச்சரவை கூட்டம் நடந்தது.

ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி?

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் வெற்றிபெற்ற 14 பெண் எம்எல்ஏக்களில் நடிகை ரோஜாவும் ஒருவர். அவருக்கு துணைமுதல்வர் அல்லது அமைச்சர் பதவி கிடைக்கும் என பரவலாக பேசப்பட்டது. ஆனால் அமைச்சரவை பட்டியலில் ரோஜா பெயர் இடம்பெறவில்லை. அமைச்சர் பதவி இரண்டரை ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும் எனவும் மீண்டும் இரண்டரை ஆண்டுகளுக்கு பின் புதியவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் நேற்று நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வெளிப்படையாக அறிவித்துவிட்டாராம். அதன்படி 2வது அமைச்சரவையில் ரோஜாவுக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரோஜாவுக்கு சபாநாயகர் பதவி கிடைக்க வாய்ப்புள்ளது என ஒய்எஸ்ஆர் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

error: Content is protected !!