இஸ்லாமாபாத்: ஆயுள் தண்டனை… உளவு பார்த்தது மற்றும் முக்கிய தகவல்களை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கசிய விட்டது தொடர்பான குற்றங்களுக்காக பாக்.,ராணுவ தளபதிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இதே வழக்கில் கீழ்மட்ட ராணுவ அதிகாரிகள் 2 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பாக்.,ல் ராணுவத்திற்கென தனி சட்டங்கள் உள்ளது. ராணுவ தளபதி காமர் ஜாவத் பாஜ்வர் மீது உளவு பார்த்ததாக எழுந்த புகார்கள் குறித்து ராணுவ கோர்ட் ரகசியமாக விசாரணை நடத்தி வந்தது.

 

இதில், தேசிய பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பல முக்கிய தகவல்களை அவர் கசிய விட்டார் என குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதனையடுத்து அந்நாட்டு சட்டத்தின்படி அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓய்வுபெற்ற 2 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்த விவகாரம் தொடர்பாக வேறு எந்த தகவலையும் பாக்., ராணுவம் வெளியிடவில்லை.

error: Content is protected !!