குஜராத் :வணிக வளாகத்தில் தீ விபத்து : 19 மாணவர்கள் பலி – வீடியோ!

குஜராத் :வணிக வளாகத்தில் தீ விபத்து : 19 மாணவர்கள் பலி – வீடியோ!

குஜராத் சூரத் நகரில் உள்ள தக்சஷீலா என்ற வணிக வளாகத்தில் இன்று மதியம் 3.30 மணியளவில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. அப்போது அந்த வளாகத்தில் உள்ள பயிற்சி மையத்திற்கு வந்து இருந்த மாணவர்கள் பலர் கட்டிடத்தை விட்டு வெளியேற முடியாமல் சிக்கி கொண்டனர். தீயில் இருந்து தப்பிக்க பல மாணவர்கள் மூன்றாவது மற்றும் நான்காவது மாடியில் இருந்து வெளியே குதித்தனர். அங்கிருந்த தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த தீ விபத்தில் இதுவரை 19 மாணவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் அவர்களில் பெரும் பாலான மாணவர்கள் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாணவர்கள் கட்டிடத்தில் இருந்து குதிக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. 19 தீயணைப்பு வண்டிகள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பிரதமர் மோடி இரங்கல்

சூரத் தீ விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘‘சூரத் தீவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்பை நினைத்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன். குஜராத் அரசு மற்றும் உள்ளூர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்’’ என மோடி டுவிட்டரில் கூறியுள்ளார்.

குஜராத் முதல்வர் விஜய் ருபானி இரங்கல்

குஜராத் முதல்வர் விஜய் ருபானியும் தன் டுவிட்டர் பக்கத்தில் சூரத் தீவிபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

‘‘சூரத் தீ விபத்து குறித்து மனவருத்தமடைந்துள்ளேன். அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும் ஆண்டவனை பிராத்திக்கிறேன்’’ என்று விஜய் ரூபானி கூறியுள்ளார்.

தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று குஜராத் அரசு அறிவித்துள்ளது. இந்த தீவிபத்து குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

https://twitter.com/aanthaireporter/status/1131954240241299456

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இரங்கல்

சூரத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தன் இரங்கலை தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!