AanthaiReporter.Com

உலகின் மிகப்பெரிய சிகரமான எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ள நேபாள அரசு மற்றும் சில தொண்டு நிறுவனங்கள் கடந்த 2 வாரங்களில் மட்டும் சுமார் 3 ஆயிரம் கிலோ எடையுள்ள குப்பைகளை எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து அகற்றியுள்ளன.

முதல்முதலாக நியூசிலாந்தை சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளத்தை சேர்ந்த டென்சிங் ஆகிய இருவரும் கடந்த 1953-ம் ஆண்டில் உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தனர். இந்த நிகழ்வின் நினைவாக, எவரெஸ்ட் சிகரத்தை தூய்மைப்படுத்தும் திட்டத்தை நேபாள அரசு கடந்த 14-ந் தேதி துவங்கியது . மலையேறும் வீரர்கள் விட்டு சென்ற சமையல் பொருட்கள், கூடாரங்கள் போன்றவற்றை அகற்றும் பணி நடந்து கொண்டு வருகிறது. நேபாள அரசின் இந்த தூய்மைப்படுத்தும் திட்டத்தின் கீழ், எவரெஸ்ட் சிகரத்தில் இருந்து சுமார் 10 ஆயிரம் கிலோ வரையிலான குப்பைகளை அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .