ஃபானி புயல் சென்னையை நெருங்காது! – சோகச் செய்தி சொன்ன வானிலை அறிக்கை! – AanthaiReporter.Com

ஃபானி புயல் சென்னையை நெருங்காது! – சோகச் செய்தி சொன்ன வானிலை அறிக்கை!

பூண்டி ஏரியில் நீர் இருப்பு குறைந்து கொண்டே வருவதால், விவசாய நிலங்களில் உள்ள கிணறு களில் இருந்து நீர் எடுத்து சென்னை பொதுமக்களின் குடிநீர்த் தேவைக்கு அனுப்பி வைப்பதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர். சென்னையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக விளங் கும் புழல், செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,257 மில்லியன் கன அடி ஆகும். தற்போது இந்த ஏரிகளில் ஞாயிற்றுக் கிழமை நிலவரப்படி வெறும் 462 மில்லியன் கன அடி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. போதிய மழை இல்லாததால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரியிலும் தண்ணீர் குறைவாக இருந்தது. இந்த நிலையில் ஃபானி புயல் சென்‌னையை நெ‌ரு‌ங்காது என்று சென்னை வானிலை ‌ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அந்தக் காற்றழுத்த தாழ்வு மண்டலம், தீவிர காற்ற ழுத்த தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் இன்று மதியம் புயலமாக மாறியது. அந்தப் புயலுக்கு ஏற்கெனவே ஃபானி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஃபானி புயல் நேரடியாக தமிழக கரையைக் கடக்க வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஃபானி புயல் சென்‌னையை நெ‌ரு‌ங்காது என்று சென்னை வானிலை ‌ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தென்கி‌ழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிவரும் ஃபானி புயலால் தமிழக மக்கள் அச்சப்பட தேவையில்லை. அதேசமயம் இந்தப் புயலால் மழை வரும் என்று ஆசைப்பட்ட சென்னை வாசிகள் கண்ணில் கண்ணீர் வந்து விட்டதென்னவோ நிஜம்!