பி.எச்.இ.எல்.,நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் ஜாப்! – AanthaiReporter.Com

பி.எச்.இ.எல்.,நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் ஜாப்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் எனப்படும் பி.எச்.இ.எல்., பொதுத்துறை நிறுவனமாகும். ஹெவி எலக்ட்ரிகல் எக்விப்மென்ட்ஸ் தொடர்புடைய பொருட்களை தயாரிக்கும் இந்த நிறுவனம் திருச்சியின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 400 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிட விபரம்: பிட்டரில் 150, வெல்டரில் 110, டர்னரில் 11, மெஷினிஸ்டில் 16, எலக்ட்ரீசியனில் 35, வயர்மேனில் 7, எலக்ட்ரானிக் மெக்கானிக் மற்றும் இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் தலா 7, ஏ.சி., அண்டு ரெப்ரிஜிரேஷனில் 10, டீசல் மெக்கானிக்கில் 7, ஷீட் மெட்டல் ஒர்க்கரில் 5, பாசாவில் 20, கார்பெண்டரில் 4, பிளம்பரில் 4, எம்.எல்.டி., பேதாலஜியில் 2, எச்.ஆர்., அசிஸ்டென்டில் 5ம் சேர்த்து மொத்தம் 400 இடங்கள் உள்ளன.

வயது: 13.4.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும். எச்.ஆர்., பிரிவுக்கு பட்டப் படிப்பு தேவைப்படும். சரியான தகவல்களை இணையதளத்தில் பெறவும்.

தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் என்ற முறையில் இருக்கும்.

விண்ணப்பிக்க: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி நாள் : 30.3.2019

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு