ஒரு ஐ டி நிருவனத்தில் தலைமை பொருப்பில் இருக்கும் நாயகன் அனந்த்நாக். வாலிப வயசில் ஏக்கத்துடன் அலையும் பையன் ஒரு நிகழ்ச்சியின் போது அஞ்சு குரியனை சந்திக்கிறார். கணடதும் வழக்கம் போல் காதலிக்கிறார்கள். அந்த காதல் நிச்சயம் வரை செல்கிறது. அதே சமயம் தன் வேலை காரணமாக அஞ்சு குரியன் பெங்களூர் சென்று விடுகிறார்.

அந்த கேப்-பில் இன்னொரு நாயகியான சம்யுக்தா மேனனை சந்திக்கிறார். அடடே இவள்தான்.. எதிர்பார்த்த கனவு தேவதை இதோ என்றெல்லாம் பினாத்த ஆரம்பித்து விடுகிறார். கூடவே முழுமையான காதல் இல்லாத அஞ்சு குரியணை திருமணம் செய்துக்கொண்டு பொய்யாக வாழ்வதைவிட தனக்கு பிடித்த சம்யுக்தாவை காதலித்து திருமணம் செய்து கொள்ள நினைக்கிறார் அனந்த்நாக்.

இதை அடுத்து பெங்களூரில் இருந்து திரும்பும் அஞ்சு குரியனிடம் நமக்குள் ஒட்டாது.. பிரிந்து விடலாம் என்றும் அதற்கான காரணத்தை டீசண்டாகச் சொல்லி பிரிந்தும் விடுகின்றனர். அப்புறம் சம்யுக்தாவும், அனந்த்நாக்கும் காதலிக்கிறார்கள். ஆனால் அந்த சம்யுக்தா தனிமனித சுதந்திரத்தை விரும்பும் பெண்ணாக இருக்கிறார் அதனால் தனக்கான சுதந்திரம் ஒரு போதும் தன்னுடைய காதலனால் உடையக் கூடாது என்று நினைக்கிறார். ஆனால் அனந்த்நாத் அதை உடைக்கிறார் இதனால் சம்யுக்தா இந்த காதல் சரிபட்டு வராது என்று கூறி அனந்த்நாக்கை விட்டு பிரிகிறார். காதல் பிரிவில் இருந்து விடுபட கோவா வரை பயணம் மேற்கொள்கிறார் அங்கு ஒரு பெண்ணை சந்திக்கிறார். ஆனால் அந்த பெண் வெறொருவரை லவ் செய்வதால் அனந்த நாக்-கை புறக்கணிக்கிறார்.இதன் பிறகு மறுபடியும் சம்யுகதாவை தேடிப் பிடித்து நூல் பிடித்து நேரடியாக சந்திக்கும் போது அவர் வேறொரு ரூட்டில் போகிறார். அப்புறம் அவருடைய வாழ்க்கையில் என்ன நடந்தது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

error: Content is protected !!