ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய விஜயபாஸ்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு! – AanthaiReporter.Com

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டிய விஜயபாஸ்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு!

ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்கு பொறுப்பேற்கும் வகையில் சுகாதாரத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பிரச்சாரத்துக்குச் சென்ற அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் ஹெல்மெட் அணியவில்லை என்று மனுதாரர் தெரிவித்திருந்தார்.

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற வகையில் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுதாரர் கோரியிருந்தார்.

விசாரணையின் போது, ஹெல்மெட் அணிவது என்பது, சுகாதாரத்துறை அமைச்சருக்கும் பொருந்தும் என்று தெரிவித்த நீதிபதிகள், அமைச்சர் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யத் தவறினால், உரிய உத்தரவைப் பிறப்பிக்க நேரிடும் என எச்சரித்து விசாரணையை 2019, ஜனவரி 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.