திமுகவின் செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்!

திமுகவின் செய்தி தொடர்பு செயலர் டி.கே.எஸ்.இளங்கோவன் நீக்கம்!

தி.மு.க மாநிலங்களவை எம்.பியாக தி.மு.க,வின் செய்தித் தொடர்பு செயலாளராகவும் இருந்து வரும் டி.கே.எஸ். இளங்கோவன் செய்தித்தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ் இளங்கோவன் விடுவிக்கப்படுவதாகக் கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “திமுகவின் செய்தித் தொடர்புச் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த டி.கே.எஸ். இளங்கோவன் அந்தப் பதவியிலிருந்து விடுவிக்கப்படுகிறார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மு.க.அழகிரி குறித்து யாரும் பேசக் கூடாது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர் களுக்கு உத்தரவிட்டுள்ளார். அதை மீறி, மதுரையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் மு.க.அழகிரி குறித்து டி.கே.எஸ்.இளங்கோவன் பேசினார். இது திமுக தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அறிவாலயத்தில் திறக்கப்படவிருக்கும் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலையை நவம்பர் 15ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி அவர்கள் திறந்து வைக்க இருப்பதாக ஊடகத்திற்கு பேட்டியளித்தார். திறப்பு விழாவுக்கு தேதி இன்னும் சரிவர முடிவு செய்யப்படாத நிலையில், அது குறித்து டி.கே.எஸ். இளங்கோவன் ஒரு தேதியைக் குறிப்பிட்டு ஊடகங்களுக்கு தெரிவித்தார்.  இந்நிலையில், திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறுவது சந்தேகம் என்று கருத்து தெரிவிக்கும் வகையில் தொலைக்காட்சியொன்றுக்கு நேர்காணல் அளித்தார்.

இதைத் தொடர்ந்து செய்தித் தொடர்புச் செயலர் பதவியிலிருந்து டி.கே.எஸ். இளங்கோவனை விடுவிக்க திமுக தலைவர் என்று திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

error: Content is protected !!