இஸ்ரோ-வில் அப்ரென்டிஸ் வாய்ப்பு! – AanthaiReporter.Com

இஸ்ரோ-வில் அப்ரென்டிஸ் வாய்ப்பு!

இந்திய விண்வெளி துறையில் பல்வேறு சாதனைகளை படைத்து வரும், இஸ்ரோ நிறுவனத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ் மற்றும் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவுகளில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பிரிவுகள்: டெக்னீசியன் அப்ரென் டிஸ் பிரிவில் மெக்கானிகலில் 13, எலக்ட்ரிகலில் 7, எலக்ட்ரானிக்சில் 12, கெமிக்கலில் 5, சிவிலில் 7 இடங்கள் உள்ளன. டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் பிட்டரில் 22, வெல்டரில் 10, எலக்ட்ரீசியனில் 9, டர்னரில் 6, மெஷினிஸ்டில் 2, டிராப்ட்ஸ்மேன் பிரிவு மெக்கானிக்கில் 2, சிவிலில் 4, எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 5, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 4, ‘ஏசி’ அண்ட் ரெப்ரிஜிரேஷனில் 4, டீசல் மெக்கானிக்கில் 4, கார்பென்டரில் 2, இன்ஸ்ட்ரூ மென்ட் மெக்கானிக்கில் 1ம் காலியிடங்கள் உள்ளன.

வயது: டிரேடு பிரிவுக்கு 35ம், டெக்னீசியன் பிரிவுக்கு 26ம் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

கல்வித் தகுதி: டெக்னீசியன் பிரிவுக்கு மூன்று வருட இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பும், டிரேடு அப்ரென்டிஸ் பிரிவுக்கு ஐ.டி.ஐ., படிப்பையும் தொடர்புடைய பிரிவுகள் ஏதாவது ஒன்றில் முடித்திருக்க வேண்டும்.

தேர்ச்சி முறை: கல்வி தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: டெக்னீசியன் பிரிவுக்கு 2018 அக்., 6 அன்றும், டிரேடு பிரிவுக்கு 2018 அக்., 13 அன்றும் நேர்காணல் மூலமாக தேர்ச்சி இருக்கும் என்பதால் இணையதளத்தை பார்த்து உரிய முகவரிக்கு ஒரிஜினல் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் செல்ல வேண்டும். முழுமையான விபரங்களை இணையதளத்தில் பார்த்து அறியவும்

விபரங்களுக்குஆந்தை வேலைவாய்ப்பு