அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

அமைதிக்கான நோபல் பரிசு ஈராக், காங்கோ நாடுகளைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

நார்வே தலைநகர் ஆஸ்லோவில் இன்று (அக்டோபர் 5) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்  பட்டது. காங்கோ நாட்டைச் சேர்ந்த மருத்துவர் டென்னிஸ் முக்வேக், போர்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைக்கு எதிராகப் போராடியவர். போரினால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்களுக்கு இலவசமாக சிகிச்சை அளித்தவர். ஒரு நாளுக்கு 18 அறுவை சிகிச்சைகளைச் செய்தவர். பல ஆண்டுகளாக, அமைதிக்கான நோபல் பரிசுக்கு இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், 2018ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இவருக்குக் கிடைத்துள்ளது.

ஈராக் நாட்டைச் சேர்ந்த நாடியா முராத், அந்நாட்டிலுள்ள சிறுபான்மை இனத்தவரான யாஷிதி இனப் பெண்களின் உரிமைக்காகப் போராடியவர். அந்த பெண்களுக்கு எதிரான அநீதிகள் மற்றும் அடக்குமுறைகளை ஐக்கிய நாடுகளில் சபையில் பேசி உலக நாடுகளின் கவனத்தைப் பெற்றவர். குறிப்பாக, ஐஎஸ் தீவிரவாதிகள் பெண்களை நடத்தும் விதம் குறித்து உலக அரங்கில் விவாதத்தை எழுப்பியவர்.

தன் இளமைப்பருவத்தில் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளான நாடியா, யாஷிதி இனப் பெண் களுக்காகப் போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுகிறார். வரும் 8ஆம் தேதியன்று டென்னிஸ் முக்வேக், நாடியா முராத் இருவருக்கும் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படவுள்ளது.

Related Posts

error: Content is protected !!