ஈ.எஸ்.ஐ.சி.யில் பல்வேறு பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com

ஈ.எஸ்.ஐ.சி.யில் பல்வேறு பணி வாய்ப்பு!

மத்திய தொழிலாளர் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் எம்ப்ளாயீஸ் ஸ்டேட் இன்ஸ்யூரன்ஸ் கார்ப்பரேஷன் என்பது தொழிலாளர் காப்பீடு மற்றும் சுகாதாரம் தொடர்பான நிறுவனம். தொழிலாளர்களின் சமூக நலன் காக்கும் அமைப்பாக இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் சோசியல் செக்யூரிடி ஆபிசர், கிரேடு 2 மேலாளர், சூப்பரிண்டென்டண்ட் பிரிவில் 539 காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயது: 2018 அக்., 5 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இத்துடன் கம்ப்யூட்டர் தொடர்புடைய திறன் கூடுதலாகத் தேவைப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணம் ரூ. 500.

தேர்ச்சி முறை: அப்ஜெக்டிவ் வகையிலான முதல் கட்டத் தேர்வு, இறுதித் தேர்வு, டெஸ்கிரிப்டிவ் வகையிலான கம்ப்யூட்டர் திறனறியும் தேர்வு, ஆங்கிலத் தேர்வு போன்ற முறைகளில் இருக்கும்.

கடைசி நாள்: 2018 அக்., 5.

விபரங்களுக்குஆந்தைவேலைவாய்ப்பு