பாரத ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு! – AanthaiReporter.Com

பாரத ரிசர்வ் வங்கியில் அதிகாரி பணி வாய்ப்பு!

நம் நாட்டின் வங்கித்துறையை நிர்வகித்தல், கட்டுப்படுத்தும் மற்றும் மேம்படுத்தும் மத்திய வங்கியாகவும், அரசின் நிதித்துறை சார்ந்த முக்கிய முடிவுகளை வழங்குவதாகவும் பாரத ரிசர்வ் வங்கி இருக்கிறது. இதில் 166 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிட விபரம்: அதிகாரிகள் பிரிவு ‘பி’ – ஜெனரலிஸ்ட் பதவியில் 127 இடங்களும், இதே பிரிவிலான டி.இ.பி.ஆர்., பதவியில் 22 இடங்களும், இதே பிரிவிலான டி.எஸ்.ஐ.எம்., பிரிவில் 17 இடங்களும் சேர்த்து மொத்தம் 166 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது: 2018 ஜூலை 1 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 21 – 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஜெனரலிஸ்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள், குறைந்தபட்சம், 60 சதவீத மதிப்பெண்களுடன், ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். டி.இ.பி.ஆர்., பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் எகனாமிக்ஸ் பிரிவில் முதுநிலை பட்டம் முடித்திருக்க வேண்டும். டி.எஸ். ஐ.எம்., பிரிவுக்கும் எகனாமிக்ஸ் படிப்பு தேவைப்படும். 

தேர்ச்சி முறை: இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ச்சி நடைபெறும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850. 

கடைசி நாள்:
 2018 ஜூலை 23. 

விபரங்களுக்கு
: ஆந்தை வேலைவாய்ப்பு