வெளிநாட்டினர் உறுப்பு தானம் பெற விதிமுறைகளை கடுமையாக்க முடிவு – AanthaiReporter.Com

வெளிநாட்டினர் உறுப்பு தானம் பெற விதிமுறைகளை கடுமையாக்க முடிவு

உடல் உறுப்பு தானங்களில் முறைகேடு நடப்பதாக எழுந்த புகாரை அடுத்து மத்திய அரசு விதிமுறைகளை கடுமையாக்கியுள்ளது. மூளைச்சாவு அடைபவர்களிடம் இருந்து உடல் உறுப்புகளை தானமாக பெற்று நடைபெறும் அறுவைசிகிச்சை தமிழகத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது. இந்நிலையில் இதயமற்று அறுவை சிகிச்சைக்காக தானமாக பெறப்படும் இதயம் அதிக அளவில் வெளிநாட்டினருக்கே பொறுத்தப்படுவதாக நோட்டோ என்ற அமைப்பு புகார் கூறியுள்ளது.

தானமாக பெற்று நடைபெறும் இதயமற்று சிகிச்சையில் மொத்த எண்ணிக்கையில் 25 சதவீத அளவு வெளிநாட்டினருக்கே பொருத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 33 சதவீத அளவு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சையிலும் வெளிநாட்டினரே பயனடைவதாகவும் அந்த அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இந்நிலையில் சுகாதாரசேவைகள் இயக்குனரகத்தின் அவசர கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் வெளிநாட்டினர் உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கான விதிமுறைகளை கடுமையாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.