தோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி! – AanthaiReporter.Com

தோனியின் உலக சாதனையை முறியடித்தார் விராட் கோலி!

அதிவேகமாக 5000 ரன்களை கடந்த கேப்டன்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த தோனியின் உலக சாதனையை முறியடித்து விராட் கோலி முதலிடம் பிடிச்சிட்டார். விராட் கோலி 82 இன்னிங்சில் 5000 ரன்களை கடந்தார். மகேந்திர சிங் தோனி 127 இன்னிங்ஸ்; ரிக்கி பாண்டிங் ஆஸ்திரேலிய அணி கேப்டன் 131 இன்னிங்சில் கடந்தார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களுருவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஒரநாள் ஆட்டத்தில் இச்சாதனையை கோலி படைத்தாா்.

அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன் என்ற சாதனையை தோனி (127 இன்னிங்ஸ்) நிகழ்த்தி இருந்தாா். அதை முறியடித்து தற்போது வெறும் 82 இன்னிங்ஸ்களில் கடந்து புதிய உலக சாதனையை படைத்தாா்.

அதிவேகமாக 5 ஆயிரம் ரன்களை கடந்த கேப்டன்கள்:

கோலி 82 இன்னிங்ஸ், தோனி 127 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் (ஆஸி. 131 இன்னிங்ஸ்), கிரேம் ஸ்மித் (தென்னாப்பிரிக்கா 135 இன்னிங்ஸ்), சௌரவ் கங்குலி (136 இன்னிங்ஸ்), முகமது அஸாருதீன் (151 இன்னிங்ஸ்), அா்ஜுனா ரணதுங்க (இலங்கை 157 இன்னிங்ஸ்), ஸ்டீபன் பிளெம்மிங் (நியூஸி. 201 இன்னிங்ஸ்).