பேஸ்புக் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபரென்ஸில் அப்டேட் தகவல்கள்!

பேஸ்புக் நிறுவனத்தின் டெவலப்பர் கான்ஃபரென்ஸில் அப்டேட் தகவல்கள்!

ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கும் திட்டத்தின் கீழ், ‘பேஸ்புக் எஃபெக்ட்ஸ் பிளாட்ஃபார்ம்’ (Camera Effects platform ) என்ற தளம் நேற்று நடைபெற்ற விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த தளத்தை பயன்படுத்தி டெவலப்பர்கள் தங்களுக்கான பிரத்தியேகமான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி செயலிகளை உருவாக்க முடியும். இந்த செயலிகள் பேஸ்புக்கின் கேமராவில் இயக்கும் வசதியும் வழங்கப்பட இருக்கிறது.

பேஸ்புக்கின் புதிய தளம் ஏற்கனவே வெளியான ‘போக்கிமான் கோ’ கேம் போன்ற தளத்தை பேஸ்புக் வெளியிட வாய்ப்பை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனங்களுடன் நேரடியாக மோதும் வகையில் பேஸ்புக் செயலிகள் ஸ்மார்ட்போன்களுக்கான சந்தைகளில் சாராமல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனரின் புதிய அறிவிப்பு மற்றும் திட்டங்கள் முழுமையாய் நிறைவேற பத்து ஆண்டுகள் ஆகும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில் இவை மேலும் விசித்திரமான மற்றும் புதுமையான அம்சங்களின் வெளியீட்டிற்கு வழி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் பேஸ்புக்கின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்பு, முன்னோட்டம், மற்றும் அறிமுகம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தது. எனினும், அடுத்த பத்து ஆண்டுகளில் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை வழங்க அதிக முக்கியத்துவம் அளிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக் F8: மனதில் நினைப்பதை டைப் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகம்

கொஞ்சம் விளக்கமாக சொல்வதென்றால் அதாவது பேஸ்புக் நிறுவனத்தின் F8 டெவலப்பர் கான்ஃபெரென்ஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் நிகழ்ச்சியில் அந்நிறுவனத்தின் எதிர்கால திட்டங்கள் சார்ந்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. இத்துடன் சில சாதனங்களும் புதிய தொழில்நுட்பங்களும் அறிமுகம் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து F8 நிகழ்ச்சியின் இரண்டாவது நாளில் அந்நிறுவனம் புதிய சாதனங்களை வெளியிட்டது. இவை முற்றிலும் வித்தியாசமானதாகவும், அபாயகரமானதாகவும் இருந்தது. இத்துடன் சில திட்டங்களுக்கான முன்னோட்ட வீடியோக்களும் திரையிடப்பட்டன.
அவ்வாறு பேஸ்புக் நிறுவனம் நேற்று அறிமுகம் செய்த சாதனங்கள் எவை என்பதை தொடர்ந்து பார்ப்போம்..,
சரவுண்டு 360 கேமராக்கள்:
பேஸ்புக் நிறுவனத்தின் புதிய 360 டிகிரி டெவலப்பர் கேமராக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. X24 மற்றும் X6 என அழைக்கப்படும் இந்த கேமராக்கள் பேஸ்புக் நிறுவனம் கடந்த ஆண்டின் F8 நிகழ்வில் அறிமுகம் செய்த பேஸ்புக் சரவுண்டு 360 மாடல்களின் அப்டேட் செய்யப்பட்ட மாடல் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள்:
ஆகுலஸ் நிறுனத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் மைக்கேல் அப்ராஷ் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி (AR) மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி கண்ணாடிகள் இடையேயான வித்தியாசம் குறித்து பேசினார். ‘முழுமையான ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி என்பது ஆடியோ மற்றும் வீடியோ என இரண்டையும் இயக்கும் திறன் கொண்டிருக்கும். இது அவ்வப்போது பயன்படுத்தப்படும் சாதாரண ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி போன்று இருக்காது’, என அவர் தெரிவித்தார்.
இம்மாதிரியான தொழில்நுட்பம் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் பிரபலமாகி, வணிக ரீதியிலான பயன்பாட்டிற்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பில்டிங் 8:
பேஸ்புக்கின் ரெஜினா டௌகன் அந்நிறுவனத்தின் மர்மமான பில்டிங் 8 திட்டம் குறித்து விளக்கினார். இந்த திட்டமானது மனதில் நினைப்பதை வார்த்தைகளாக டைப் செய்யும் வழிமுறை ஆகும். மனித மூளையில் அனாத்து செயல்களை மேற்கொள்ள உதவும் பகுதியில் பொறுத்தப்பட்டுள்ள சிறிய சிப்செட்கள், மூளை நினைப்பதை அப்படியே டைப் செய்ய வழி செய்கிறது.
அதாவது, மூளையின் ஸ்பீச் சென்டரில் இருந்து வரும் வார்த்தைகளை, நிமிடத்திற்கு 100 வார்த்தைகள் என்ற வேகத்தில் டைப் செய்ய வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக ஒருவர் தனது ஸ்மார்ட்போனில் டைப் செய்வதை விட ஐந்து மடங்கு வேகமானது என்பதும் குறிப்பிடத்தக்கது.
முதற்கட்டமாக நிமிடத்திற்கு 8 வார்த்தைகளை டைப் செய்ய முடியும் என டௌகன் தெரிவித்துள்ளார்.
error: Content is protected !!