5 மாநிலங்களுக்கான தேர்தல் நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை!!

5 மாநிலங்களுக்கான தேர்தல்  நவம்பர் 11 முதல் டிசம்பர் 4 வரை!!

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, ராஜஸ்தான், மிசோரத் ஆகிய ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஐந்து மாநில தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சம்பத் டெல்லியில் இன்று அறிவித்துள்ளார்.மேலும் ஏற்காடு சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4 - vote mechine
டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.இதையடுத்து ,மேற்கூறிய ஐந்து மாநில தேர்தலுக்கான தேதியை தலைமை தேர்தல் ஆணையர் வி.எஸ் சம்பத் இன்று மாலை டெல்லியில் செய்தியாளர்களிடம் அறிவித்தார்.

சத்தீஸ்கரில் நவம்பர் 11 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், மத்தியப்பிரதேசத்தில் நவம்பர் 25 ஆம் தேதியன்று ஒரே கட்டமாகவும், அதேப்போன்று ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 1 ஆம் தேதியன்று ஒரே கட்டமாகவும், டெல்லி மற்றும் மிசோராமில் டிசம்பர் 4 ஆம் தேதியன்று ஒரே கட்டமாகவும் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து மேற்கூறிய 5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.முதன்முறையாக ஒவ்வொரு தொகுதிக்கும் விழிப்புணர்வு பார்வையாளர்கள் நியமிக்கப்படுவதாக சம்பத் தெரிவித்தார்.
தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

வேட்பாளர்களை நிராகரிக்கும் உரிமையை அளிக்கும் பொத்தான்கள் வாக்குப்பதிவு எந்திரத்தில் இடம்பெறும் என்றும் மேற்கூறிய 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8 ஆம் தேதியன்று நடைபெறும் என்றும் சம்பத் தெரிவித்தார்.

Election Commission announces poll dates for five states: /strong>
***********************************************************
The Election Commission today announced election dates for five states – Madhya Pradesh, Rajasthan, Chhattisgarh, Mizoram and Delhi – seen as a semi-final round before the national polls due in May. Here are the highlights from the press conference being held in New Delhi:

Related Posts

error: Content is protected !!