படைவீரன் – விமர்சனம்! – சமூகத்திற்கு தேவையே இல்லாத படமிது!

படைவீரன் – விமர்சனம்! – சமூகத்திற்கு தேவையே இல்லாத படமிது!

நம் தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, சாதீய மோதல்கள் என்பது என்பது நீறு பூத்த நெருப்பாகத்தான் இன்றளவும் இருக்கிறது. அதாவது இங்கு முழுமையான சமூக நீதி ஏற்படவில்லை என்றாலும், நம் மாநிலத்தில் சிறு பான்மையினர் அச்சத்தோடு வாழவில்லை. ஆங்காங்கே ஜாதி மோதல்கள் அன்றாடம் நடக்கின்றன என்றாலும் அவை குறிப்பிட்ட வட்டாரங்களோடு முடிந்து விடுகின்றன. தற்போதைய காலக்கட்டத்தில் வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சமூகங்கள் இங்கே ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெற்றுள்ளன. இப்படியான சூழ் நிலையில் ‘தங்கள் ஜாதி தான் உசத்தி’ என உச்சக் குரலில் பேசி அடி, தடி, வெட்டி, கொலை, ஆணவம், அதிகாரம் என்று மனிதம் மறக்க வேண்டிய சில கரும்புள்ளியை கலர் கலரான ரீலில் படமாக எடுத்து ‘படைவீரன்’ என்ற பெயரில் ரிலீஸ் செய்திருக்கிறார்கள். மாடர்னாகிக் கொண்டிருக்கும் சமூகத்திற்கு தேவையே இல்லாத படமிது என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது தேனிக்கு பக்கத்தில் உள்ள ஒரு வில்லேஜில் ஆதிக்க ஜாதிக்கும், அருகிலுள்ள கிராமத்தில் இருக்கும் இன்னொரு ஜாதிக்கும் பகை ஓடிக் கொண்டே இருக்கிறது.இதனிடையே ஊரில் பொறுக்கித்தனமாய் சுற்றித் திரியும் நாயகன் (?) விஜய் யேசுதாஸுக்கு, போலீஸ் வேலை மற்றும் அதன் எக்ஸ்ட்ரா வருவாய், மரியாதை போன்றவைகளை அரைகுறையாக தெரிந்தததும், எப்படியாவது போலீஸில் சேர்ந்துவிடத் துடிக்கிறார். ஆனால், அதற்குத் தகுதியில்லாத அவர், தன் சொந்தக்காரரான எக்ஸ் சர்வீஸ்மேன் பாரதிராஜாவிடம் ஆதங்கப்படுகிறார்.. உடனே நாட்டுக்காக போராடும் மிலிட்டிரியில் இருந்ததாகச் சொல்லும் பாரதிராஜா ஒரு லட்ச ரூபா ரெடி பண்ணினா போலீஸில் சேர்ந்த்து விடுவதாக சொல்ல கொஞ்சம் மிரட்டியும், மிச்சத்தை திருடியுமாக ஒரு லட்சம் கொண்டு வந்து கொடுக்கும் வி. ஜே. வை ஜஸ்ட் லைக் ஒரு போனில் டிப்பார்ட்மெண்டில் சேர்த்து விடுகிறார். அப்படி போலீஸானர் முதல் டூட்டியாக தன் ஊரில் நடக்கும் கலவரத்தை அடக்கவே நிர்பந்தப்படுகிறார்.. அதனிடையே நடக்கும் ஜாதி திமிர்கள்-தான் – படத்தின் கதை.

உலகம் ரொம்ப ஹைடெக்காகி ஹேக்கிங், டேட்டிங், ஸ்பேஸ் என்று போய் கொண்டிருக்கும் போது ஒரு முழு சினிமா-வை ஒரு குறிப்பிட்ட ஏரியா ஜாதி ஜனங்களிடையே மினுங்கிக் கொண்டிருக்கும் போக்கை மீண்டும், மீண்டும் சலிப்பும், வெறுப்பும், வரும் வகையில் ஒரு முழு சினிமா-வாகவே எடுக்க துணிந்த இயக்குநரையும், அதற்கும் ஃபைனான்ஸ் செய்த தயாரிப்பாளரையும் கோலிவுட்டை விட்டே துரத்தலாம்..

மார்க் 5 / 1

error: Content is protected !!