கிரீன் கார்டு வாங்கிய இந்தியர்களின் எண்ணிக்கை 300% அதிகம்! – அமெரிக்கா தகவல்!

கிரீன் கார்டு வாங்கிய இந்தியர்களின் எண்ணிக்கை 300% அதிகம்! – அமெரிக்கா தகவல்!

பலவேறு தடைகளை அதிபர் ட்ரம்ப் ஏற்படுத்திய நிலையிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை 300 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

உலக நாடுகளில் பலரின் ஆசைவாழ் நாடுகளில் ஒன்றாக திகழும் அமெரிக்காவுக்குச் செல்லும் பிற நாட்டவர்களுக்கு முதலீடு தொடர்பான இ.பி.5 விசாக்கள் வழங்கப்படுகின்றன. ’கிரீன் கார்டு’ என்று அழைக்கப்படும் இந்த அட்டைகள் பெற்ற இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2016-17 நிதியாண்டில் மொத்தம் 174 இந்தியர்கள் மட்டுமே அமெரிக்க கிரீன் கார்டுகளைப் பெற்றிருந்த நிலையில், 2018 செப்டம்பர் வரையிலான 12 மாதங்களில் மொத்தம் 585 கிரீன் கார்டுகளை இந்தியர்கள் பெற்றுள்ளனர். 2016ஆம் ஆண்டில் இந்தியர்களுக்கு வழங்கப்பட்ட கிரீன் கார்டுகளின் எண்ணிக்கையை (169) விட இது 293 சதவிகிதம் அதிகமாகும். அதிக விசாக்களைப் பெற்ற நாடுகளுக்கான பட்டியலில் தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் அதிக கிரீன் கார்டுகளைப் பெற்ற நாடுகள் வரிசையில் முதலிடத்தில் சீனா இருக்கிறது. 2018ஆம் ஆண்டில் மொத்தம் 4,642 கிரீன் கார்டுகளை சீனர்கள் பெற்றுள்ளனர். இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அளவை விட 38 சதவிகிதம் குறைவுதான். வியட்நாம் மொத்தம் 585 கிரீன் கார்டுகளைப் பெற்றுள்ளது. எண்ணிக்கையில் இவ்விரண்டு நாடுகளை விடக் குறைவாக இருந்தாலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா மிக அதிக வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது.

இப்படியாப்பட்ட கிரீன் கார்டு பெறுவதற்கான விதிமுறைகளில் 1 மில்லியன் டாலர் முதலீட்டுடன் குறைந்தது 10 வேலைவாய்ப்புகளையாவது உருவாக்க வேண்டும். எனினும் குறிப்பிட்ட சில பகுதிகளில் முதலீட்டு அளவு 5 லட்சம் டாலராகக் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விவரங்களை அமெரிக்க அரசுத் துறை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.

Related Posts

error: Content is protected !!