ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க செப். 30 வரை காலக்கெடு நீட்டிப்பு | – AanthaiReporter.Com

ஆதார் எண்ணுடன் பான் கார்டு இணைக்க செப். 30 வரை காலக்கெடு நீட்டிப்பு |

இது வரை இந்தியாவில் சுமார் 42 கோடி பான் கார்டுகள் வழங்கப்பட்ட நிலையில் அதில் கிட்டத்தட்ட 28 கோடி பான் கார்ட்டுகள் மட்டுமே ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியான நிலையில் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30 தேதி வரை இணைக்கலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.

கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஆதார் அட்டை தொடர்பாக சுப்ரீம் கோர்ட் ஒரு உத்தரவு பிறப்பித்தது. ஆதாருக்கு அரசியலமைப்பு சட்டத்தின் கீழான அங்கீகாரம் குறித்த நீதிமன்ற உத்தரவை அடுத்து வரித்துறையினர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி வருமான வரி சட்டம் 139 ஏஏ (2)-ன் கீழ் நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வருமான வரி தாக்கலுக்கு ஆதாரை இணைக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்தது.

இதையொட்டி வருமான வரித் துறையின் இணையத்தளமான – incometaxindia.gov.in தளத்தில் வெவ்வேறு விதத்தில் ஆதாருடன் பான் எண்ணை இணைக்கும் வழிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. IT துறையின் மின் தாக்கல் (e-filing portal) முறையிலும் incometaxindiaefiling.gov.in என்ற தளத்தின் மூலம் ஆதார் எண்ணுடன், பேனை இணைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. வருமான வரித்துறை இணையதளத்துக்கு சென்று உங்களது பான் நம்பர் மற்றும் ஆதார் எண்ணை அளித்தால் இணைப்புக்கான இணையதளத்தை அளிக்கும். ஆதார் கார்டில் உள்ள பெயருக்கும் பான்கார்டில் உள்ள பெயருக்கும் வித்தியாசம் இருந்தால் இணைப்பு கிடைக்காது. இணைப்பு நடவடிக்கையை மேற்கொள்ள இயலாது என வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். அவ்விதம் இணைப்பு மேற்கொள்ள இயலாதவர்கள் என்எஸ்டிஎல் மற்றும் யுடிஐஐடிஎஸ்எல் மையத்துக்கு சென்று ஆதார் அங்கீகாரத்தை உறுதி செய்ய வேண்டும்.சிறிதளவு மாற்றம் இருப்பின் வருமான வரித்துறையினர் ஒரு முறை கடவுச் சொல்லை (ஓடிபி) மொபைல் போனுக்கு அனுப்பி சம்பந்தப்பட்டவரை உறுதி செய்வர் என்றும் வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆக வருமான வரி தாக்கல் செய்ய, ஆதாருடன் நிரந்தர கணக்கு எண்ணை (PAN எண்) இணைத்தல் கட்டாயம். நிரந்தர கணக்கு எண்ணுடன் ஆதாரை இணைப்பதற்கு பல்வேறு கட்டங்களில் கால அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால் இம்முறை இறுதியாக இன்று வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்ட நிலையில், பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மேலும் 6 மாதங்கள் அவகாசம் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி செப்டம்பர் 30-ம் தேதி வரை பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கலாம் என்று கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது