3 லட்சத்துக்கு மேலே கேஷ் டீலிங் -க்கு தடா!

3 லட்சத்துக்கு மேலே கேஷ் டீலிங் -க்கு தடா!

நாட்டில் கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கருப்புப் பணத்தைத் தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றமும் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை (எஸ்ஐடி) நியமித்தது. அக்குழு கடந்த மாதம் தனது பரிந்துரையை அளித்தது. அதில், 3 லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்கப் பரிவர்த்தனையைத் தடுக்க வேண்டும். தனிநபர்களும், நிறுவனங்களும் ரூ.15 லட்சத்துக்கு மேல் ரொக்கமாக பணம் வைத்திருக்க அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளை அளித்தது.

mon aug 24

இவ்விதம் தடை விதித்தால் வருவாய்த் துறை அதிகாரிகள் அதிக கெடுபிடி செய்வர், அதிகாரிகளின் துன்புறுத்தலுக்கு வர்த்தகர்கள் இலக்காகிவிடுவர் என்பதையும் அரசு கவனத்தில்கொண்டுள்ளது. ரூ. 3 லட்சம் என்ற வரம்பானது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு அல்லது காசோலை மூலமாகத்தான் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்விதம் அளிக்கப்படும் தொகையை எளிதில் யார் மூலம் யாருக்குச் செல்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதேசமயம் ரொக்கமாகக் கொடுத்தால் அதைக் கண்டுபிடிப்பது கடினம். கார் மற்றும் நகை வாங்கும்போது ரூ. 3 லட்சத்துக்கு மேலாக இருப்பின் அதை ரொக்கமாக ஏற்கக் கூடாது. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் காசோலை மூலமான பரிவர்த்தனையாகவே அது இருக்க வேண்டும்.ரொக்க பண பரிவர்த்தனையைக் குறைத்து கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலமான பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் சமீபத்தில் மத்திய அரசு கடன் அட்டை மூலமான பரிவர்த்தனைகளுக்கு சேவைக் கட்டணத்தை ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது

இது குறித்து டெல்லியில் அசோசேம் அமைப்பு செவ்வாய்க்கிழமை நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் தலைவர் ராணி சிங் நாயர், “3 லட்சம் ரூபாய்க்கு மேலான ரொக்கப் பரிவர்த்தனையை தடை செய்வது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இது தவிர சிறப்பு விசாரணைக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தும் பரிசீலனையில் உள்ளன. வருமான வரித் துறையைப் பொருத்த வரையில் ரூ.1 லட்சத்துக்கு மேலான பணப் பரிமாற்றத்தின்போது ஒரு சதவீத டிடிஎஸ், பான் எண்ணைக் குறிப்பிடுவது ஏற்கெனவே கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. அதிக அளவிலான பணத்தை ரொக்கப் பரிமாறிக் கொள்வதைக் குறைத்துவிட்டால், நாட்டில் கருப்புப் பணப் புழக்கம் பெருமளவில் குறைந்துவிடும் என்பதை அடிப்படையாகக் கொண்டே சிறப்பு விசாரணைக் குழு தனது பரிந்துரைகளை அளித்துள்ளது”என்றார்.

Related Posts

error: Content is protected !!