ஏய்.. இப்ப இன்னாங்கறே? – பாரதிராஜாவை சீண்டுகிறார் பாலா! -வீடியோ பேச்சு – AanthaiReporter.Com

ஏய்.. இப்ப இன்னாங்கறே? – பாரதிராஜாவை சீண்டுகிறார் பாலா! -வீடியோ பேச்சு

“குற்றப் பரம்பரை’ என்பது நடந்த வரலாறு. இதை யார் வேண்டுமானாலும் படமாக்கலாம். தான் மட்டும்தான் படமாக்குவேன் என்பது சிறுபிள்ளைத்தனமானது. அப்படிச் சொல்ல இங்கே யாருக்கும் அதிகாரம் இல்லை. உண்மை யில் பெருங்காமநல்லூரில் நடந்த வரலாற்றுச் சம்பவம் என்னவென்றே எனக்குத் தெரியாது. அப்படியிருக் கும்போது என்னால் எப்படி அந்த வரலாற்றை படமாக எடுக்க முடியும்..? ஒரு நாள் திடீரென்று அவர் எனக்கு போன் செய்து ‘இது என் கனவுப் படம், நீ எடுக்கக் கூடாது’ என்றார் பாரதிராஜா. நானும், ‘நான் உங்கள் கதையை எடுக்கவில்லை’ என்றேன். பாரதிராஜாவிடம் பல முறை சொல்லியும், அதைப் புரிந்து கொள்ளும் நிலையில் அவர் இல்லை.
cine apr 9
அதன் பின்னர், “பாலா என் எச்சிலை தின்ன மாட்டான் என நம்புகிறேன்” என்று பாரதிராஜா பேட்டி கொடுத்தார். அந்த நேரத்தில் எனக்கு ரொம்ப எரிச்சல்தான் வந்தது. அதுதான் நாம் தன்னிலை விளக்கம்தான் சொல்லிட்டோமே. அந்தக் கதையில்லைன்னு சொல்லியாச்சே.. திரும்பத் திரும்ப ஏன் அதையே அவர் சொல்லிட்டிருக்காருன்னு கோபம் வந்தது.. சரி.. அவருக்கும் வயதாகிவிட்டது, குழந்தை மாதிரி நினைத்துக் கொள்வோம் என விட்டுவிட்டேன்.

இந்த நேரத்தில் திடீரென்று உசிலம்பட்டியில் பாரதிராஜா பூஜை போடப் போகிறார் என்று தெரிந்து கொண்டேன். அந்த நேரத்தில் என்னை சந்திக்க வந்த தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் இது குறித்து சில விஷயங்களை பகிர்ந்து கொண்டு என்னையும் அந்த பூஜைக்கு கூப்பிடச் சொல்லுங்க. நானும் அந்த விழாவுக்கு வந்து உண்மையை பேசிடறேன்னு சொன்னேன். ஆனால் என்னை அந்த விழாவுக்கு அழைக்கவில்லை. நானும் போகவில்லை.

2 நாட்களுக்கு முன்பாக அந்த பூஜை நிகழ்ச்சியில் பாரதிராஜா பேசியதாக ஒரு செய்தி பத்திரிகையில் வந்திருந்த்து. அதையும் தனஞ்செயனிடம் சுட்டிக் காட்டி என்ன இப்படி என்று கேட்டேன். அவரும் பாரதிராஜாவிடம் பேசிவிட்டு இதோட விட்டுரலாம்னு சொல்லியிருக்கேன். நீங்களும் விட்ருங்களேன் என்றார். அதுனால நானும் பேசாமல் இருந்தேன்.

ஆனால் இன்றைக்கு குமுதம் பத்திரிகையில் இந்த படத்துக்கு கதை எழுதுகிற ரத்னகுமார் என்னைக் கீழ்த்தரமாகப் பேசியிருக்கிறான். இனிமேலும் நான் பேசாமல் இருந்தால் நன்றாக இருக்காது என்றுதான் நல்லாருக்காது என்று நினைத்து எனது தரப்பு நியாயத்தைச் சொல்வதற்குத்தான் இந்த பிரஸ் மீட்டை ஏற்பாடு செஞ்சிருக்கேன்.

பாரதிராஜா திரும்ப திரும்ப ரத்னகுமாரை எனக்கு எதிராக பேசவிட்டு வேடிக்கை பார்க்கிறார். எனக்கு படம் எடுக்க தெரியாது என்றும், பாரதிராஜாவிடம் உதவியாளராக வந்து சினிமாவைக் கற்றுக் கொள்ளட்டும் என்றும் ரத்னகுமார் கூறியுள்ளான். நான் இதுவரையிலும் பாலு மகேந்திரா ஒருவரிடம் மட்டுமே உதவி இயக்குனராக பணிபுரிந்துள் ளேன். அவரை தவிர வேறு யாரையும் நான் குருவாக ஏற்றுக் கொள்ள கூடாது என்பதில் தெளிவாக இருப்பவன். அதற்காக பல நாட்கள் பட்டினி கிடந்தவன்.

இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு விசயத்தை இப்போது சொல்கிறேன். நான் ‘பிதாமகன்’ ஷூட்டிங்ல இருந்தப்ப இந்த ரத்னகுமார் என்னை பார்க்க வந்தான். ஷூட்டிங் முடிஞ்சு ஹோட்டலுக்கு வந்தால்.. இவனும் என்கூட வந்து ஒரு முக்கால் மணி நேரம் பேசியே கொல்லுவான்.. அதுலேயும் பாரதிராஜாவின் பரம்பரையையே தப்புத் தப்பாகப் பேசி, ‘அவன் படம் எடுக்க மாட்டான். என்னுடைய கதையை வைத்து நீ படம் எடு’ என்று அப்போது கூறிய கீழ்த்தரமானவன்தான் இந்த ரத்னகுமார். இன்று அவனை என்னைப் பற்றி தவறாக பேசவிட்டு, பாரதிராஜா வேடிக்கை பார்க்கிறார்.

கடைசியா ஒண்ணு சொல்லிக்கிறேன்.. பாரதிராஜா, ரத்னகுமார் இருவரும் என்னைப் பற்றி அவதூறாகப் பேசுவதை இதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். இதுவரை நான்கு முறை என்னைப் பற்றி அவர்கள் பேசும்போது பொறுமை யாக இருந்துவிட்டேன். இனிமேல் அப்படியே பொறுமையாக இருக்க முடியாது. இதற்கு மேலும் அவர்கள் ஒரு வார்த்தை இது சம்பந்தமாக என்னைப் பற்றி பேசினால், எனக்கு நல்லதோ, கெட்டதோ.. ஆனால் அவர்களுக்கு அது நல்லதல்ல. இது என் இறுதி எச்சரிக்கை..” என்று தெரிவித்தார்