டிஜிட்டல் மீடியா துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி!- மத்திய அரசு அனுமதி!

டிஜிட்டல் மீடியா துறையில் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி!- மத்திய அரசு அனுமதி!

காரணமே தெரியாமல் சரிவடைந்துக் கொண்டிருக்கும் பொருளாதார நிலையை சீராக்க, நிலக்கரி சுரங்கம், டிஜிட்டல் மீடியா துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் அந்நிய நேரடி முதலீட்டிற் கான விதிமுறைகளை மத்திய அரசு தளர்த்தி உள்ளது.

இந்தியாவில் பொருளாதார மந்தநிலை காரணமாக வாகன உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. பல்வேறு தொழில் நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்தியதால் நாடுமுழுவதும் லட்சக்கணக்கானோர் வேலையின்றி தவித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில், நடப்பு ஆண்டில் நாட்டின் வளர்ச்சி விகிதம் கடுமையான சரிவை சந்திக்கும் என பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்தியா மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்க்கிய முடிவுகள் குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தொடங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன் படி, இந்தியா முழுவதும் புதிதாக 75 அரசு மருத்துவ கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 24,375 கோடி செலவில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் மூலம், மேலும் 15,700 மருத்துவ இடங்கள் உருவாக்கப்படும். மருத்துவ துறையில் இதுவொரு மிகப்பெரிய விரிவாக்கம்” என்றார்.

கரும்பு விவசாயிகளின் நலனுக்காக நாங்கள் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளோம். 2019-20 ஆம் ஆண்டிற்கான 6 மில்லியன் டன்களுக்கான ஏற்றுமதி மானியத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

சர்க்கரை ஆலைகளுக்கு 2019-20 மார்க்கெட்டிங் ஆண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) ஒரு டன்னுக்கு மொத்தம் 10,448 ரூபாய் ஏற்றுமதி மானியம் வழங்கப்படும், இதனால் அரசுக்கு கூடுதலாக, ரூ .6,268 கோடி செலவாகும். சர்க்கரை ஏற்றுமதிக்கான மானியம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மில்லியன் கணக்கான விவசாயிகளுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.

அதேபோல், நிலக்கரி சுரங்கம் அமைக்க நூறு சதவீதம் நேரடி அந்நிய முதலீட்டுக்கு மத்திய அமைச் சரவை அனுமதி அளித்துள்ளது. மேலும், அரசின் அனுமதி இல்லாமல் ஒப்பந்த அடிப்படையில் உற்பத்தி செய்வதில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டு அனுமதியளித்துள்ளதாக அவர் கூறினார். அதேபோல், டிஜிட்டல் மீடியா துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவீத அந்நிய முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிலக்கரி சுரங்கங்களில் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது என முடிவு செய்துள்ளது. சுரங்கத்துறை தொடர்பான மற்ற உள்கட்டமைப்பு வசதிகளிலும் வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தம் அடிப்படையிலான உற்பத்தி துறையிலும் 100 சதவீத அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்நாட்டு நிறுவனங்களிடம் இருந்து 30 சதவீத பொருட்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்ற கட்டுப்பாடும் தளர்த்தப்பட்டுள்ளது. நேரடி சில்லறை வர்த்தகம் துவங்குவதற்கு முன்னால் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தை நடத்தலாம் என்றும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. மின்னணு ஊடகத் துறையிலும் அரசு அனுமதியுடன் 26 சதவீத அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Posts

error: Content is protected !!