நாட்டின் மிக பெரிய மூவர்ண கொடி! -ராஞ்சியில் பாரிக்கர் ஏற்றினார். – AanthaiReporter.Com

நாட்டின் மிக பெரிய மூவர்ண கொடி! -ராஞ்சியில் பாரிக்கர் ஏற்றினார்.

ஜார்க்கண்டின் ராஞ்சி நகரில் உள்ள பஹாரி மந்திர் பகுதியில் நாட்டின் மிக பெரிய மூவர்ண கொடியை மிக உயர்ந்த கம்பத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி அமைச்சர் பாரிக்கர் இன்று ஏற்றினார். அதன் பின் அவர் பேசும்பொழுது, நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 119வது பிறந்த தின நிகழ்ச்சியில், நாட்டின் மிக உயரிய, பெரிய மற்றும் மிக அழகிய மூவர்ண கொடியை ஏற்றி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என கூறியுள்ளார்.
flag ranji jan 24
இந்த கொடி 66 அடி உயரமும், 99 அடி அகலமும் கொண்டது. அது 293 அடி உயர கம்பத்தில் ஏற்றப் பட்டது. நேற்றுவரை, 96 அடி அகலம் மற்றும் 64 அடி உயரத்துடன் நாட்டின் பெரிய மற்றும் உயர்ந்த மூவர்ண கொடியானது பரீதாபாத் நகரில் உள்ள 250 அடி உயர கம்பத்தில் பறந்து கொண்டிருந்தது. இது கடந்த வருடம் ஏற்றப்பட்டது.

இங்கிருந்து ஒரு கி.மீட்டர் தூரத்தில் உள்ள பஹாரி மந்திர் பகுதியில் உள்ள பீர்சா முண்டா மைதானத்தில் கூடியிருந்த பள்ளி குழந்தைகள் முன் பேசிய அவர், இந்த அதிசயமிக்க வாய்ப்பை வழங்கியதற்காக ஜார்க்கண்ட் மற்றும் அதன் முதல் அமைச்சர் , அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் பிற உயரதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.