செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

செக்கச் சிவந்த வானம் இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியிருக்கும் மல்டி ஸ்டார் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ரோஜா திரைப்படத்தில் ஏஆர்.ரஹ்மானை மணிரத்னம் அறிமுகப்படுத்தியப் பிறகு இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள பதினாறாவது படம் இதுவாகும். படு கிரண்டாக நடந்த இவ்விழாவினை கார்த்திக், சின்மயி இருவரும் வழங்கினர். ரசிகர்களின் ஆரவாரத் தோடு ஏ.ஆர்.ரஹ்மான் என்ட்ரியானார். அவரது ‘மழைக்குருவி’ பாடலோடு இசை வெளியீட்டு விழா இனிதே தொடங்கியது.

அரவிந்த்சாமி – அதிதிராவ், அருண் விஜய் – ஐஸ்வர்யா ராஜேஷ் , சிம்பு – டயானா எரப்பா படத்தின் டிரெய்லரில் வந்தது போல் ஒவ்வொரு ஜோடியாக மேடை ஏறி பேசினர். பிறகு மேடை ஏறிய வைரமுத்து, “வெற்றி தோல்விகளின் பாதிப்பு இல்லா மல், உடல்நலத்தின் தாக்கங்களைத் தாண்டி, பொருளாதார வீழ்ச்சிகளைத் தாண்டி ஒரு மனிதன் தொடர்ந்து முப்பந்தைந்து வருடங்கள் தொய் வின்றி அதே உணர்ச்சியுடன் இருக்க முடியும் என்றால் அது மணிரத்னம்தான். அதைப் பார்த்து வியப்படை கிறேன். இந்தத் தலைப்பு எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. ‘செக்கச் சிவந்த வானம்’ என்று எந்த ஒரு தமிழனும் ‘ச்’ எனும் ஒற்றெழுத்தில் தமிழ் உட்கார்ந்து தமிழ் புலி போல பாய்கிறது. மெட்ராஸ் டாக்கீஸில் நிறைய சிறந்த படைப்புகளை உருவாக்கியிருக்கிறீர்கள். ஆனால், ஒரு மிகச் சிறந்த படைப்பை நீங்கள் தயாரிக்கவில்லை. கவிதாலயா தான் தயாரித்திருக்கிறது. அந்த படைப்புதான் ஏ.ஆர்.ரஹ்மான். பெய்யன பெய்யும் மழை எனும் என் கவிதையை காதல் பாடலாக பயன்படுத்தியதற்கு நன்றி” என்றார்.

இந்த விழாவைத் தொகுத்து வழங்கிய பின்னணிப் பாடகி சின்மயி, “மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் – வைரமுத்து கூட்டணி தொடர்ந்து மேஜிக்கலான பாடல்களைத் தந்திருக்கிறது. இந்தப் படத்தில் என்ன ஸ்பெஷல்?” என்று மணிரத்னத்திடம் கேட்டார். “ஒன்றல்ல, இரண்டு ஸ்பெஷல்” என தனக்கு இருபுறமும் நின்றிருந்த ஏ.ஆர்.ரஹ்மானையும் வைரமுத்துவையும் கைகாட்டினார் மணிரத்னம். தொடர்ந்து, “ஒரு இயக்குநர் சரியான நபர்களை உடன் வைத்திருந்தால் போதும். மற்ற எல்லா வற்றையும் அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். நாம் ஒன்றும் செய்யத் தேவையில்லை” என்றார்.

உடனே மைக்கை வாங்கிய வைரமுத்து, “அவர் தன்னடக்கத்துடன் சொல்கிறார். நான் ஒரு உண்மையைச் சொல்கிறேன். எங்கள் வேலையை அதிகப்படுத்துவதும் அவர் தான், கடினப் படுத்துவதும் அவர் தான், எளிமைப்படுத்துவதும் அவர் தான். ஒரு இயக்குநர் என்ன செய்ய வேண்டுமென்றால், நல்ல உள்ளடக்கத்தை இசையமைப்பாளருக்கும் பாடலாசிரியனுக்கும் போதிக்க வேண்டும். எங்களை விட்டால் வேற மாதிரி பண்ணுவோம். ஆனால், எது தேவை என்பதை அறிந்து வாங்கக்கூடிய ஆற்றல் இயக்குநர் மணிக்கு உண்டு. ‘இதுதான் தேவை’ என்று தேவையை அறிந்து கேட்டுப் பெறக்கூடிய ஆற்றல் கொண்டவர்.

யானை வேட்டைக்குச் செல்ல வேண்டுமென்றால் வேலோடு செல்ல வேண்டும். மீன் வேட்டைக் குப் போக வேண்டுமென்றால் வலையோடு செல்ல வேண்டும். பல பேர் மாற்றி ஆயுதங்களைக் கொண்டுபோய் விடுகிறார்கள். மீன் வேட்டையா, மான் வேட்டையா என்பது அவருக்குத் தெரியும். அதனால் தான் அவர் வெற்றி பெறுகிறார்” என்றார். உடனே, “வைரமுத்துவை இப்படிக் கொஞ்ச நேரம் பேசவிட்டாலே போதும். அதிலிருந்து இரண்டு வரிகள் எடுத்துக் கொண்டால் பாட்டு வந்துவிடும்” என்று மணிரத்னம் சொல்ல, அங்கு சிரிப்பலை எழுந்தது.

நடிகர் சிம்பு “நான் ஒரு வார்த்தைதான் பேச வந்தேன் ‘நன்றி மணி சார்’. நான் கண்டிப்பா பேசுவேன், நான் பேசுவேன்னு எல்லோருக்கும் தெரியும். ஆனா இப்போ பேசுறதவிட. இயக்குனர் மணிரத்னம் எடுத்துள்ள இந்த படம் பேசும். அதுக்கப்புறம் நான் பேசுறேன்” என்று கூறிவிட்டு மேடையில் இருந்து இறங்கி விட்டார்.

error: Content is protected !!