எவரெஸ்ட் சிகரத்திற்கு இன்னும் ஆயுள் ஜஸ்ட் 85 ஆண்டுகள்தான்! – ஆய்வில் தகவல்

எவரெஸ்ட் சிகரத்திற்கு இன்னும் ஆயுள் ஜஸ்ட் 85 ஆண்டுகள்தான்! – ஆய்வில் தகவல்

பனி படர்ந்துள்ள இமயமலையில் உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரம் உள்ளது. இங்கு நிலவும் பருவநிலை மாற்றம் காரணமாக இச்சிகரத்தில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன என தெரிவித்துள்ளனர். கடந்த 1960 ம் ஆண்டுகளைவிட 1990 ம் ஆண்டுகளில்தான் பனிப்பாறைகள் அதிக அளவில் உருகக் தொடங்கின. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில்தான் எவரெஸ்ட் சிகரத்தில் வெப்பம் அதிகரித்தது.
everst may 28
இந்நிலையில் எவரெஸ்ட் பகுதியில் இன்றும் அதிகரித்து வரும் வெப்ப நிலை குறித்து ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகள் கால நிலை மாற்றம் விளைவாக எவரெஸ்ட் பகுதியில் பனிப்பாறைகள் குறைந்தது 70 சதவிகிதம் மறைந்து விடும். அது மட்டுமின்றி இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் முழுமையாக மறைந்து போய்விடும் என கூறி உள்ளனர். சாட்டிலைட் படங்களை வைத்து எடுக்கபட்ட ஆய்வுகள் மூலம் இந்த தகவல்கள் தெரிய வருகின்றன. இந்த ஆய்வில் நேபாளம், பிரான்ஸ், நெதர்லாந்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வு குறித்து சர்வதேச அறிவியல் இதழான தி க்ரையோஸ்பியரில் விஞ்ஞானி ஜோசப் ஷியா, வெளியிட்டு உள்ள தகவலில்,” 2100-ல் உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஒரு கடுமையான பாதிப்பை அடையும். காட்மாண்டுவை தளமாக கொண்டு சர்வதேச மையத்தில் ஆய்வு செய்ததில், கால நிலை மாற்றங்களால் பனிப்பாறைகள் உருகும், வெள்ள அபாயத்தால் மலைவாழ்வினங்கள் பாதிக்கப்படும். மேலும் சுருங்கி பனிப்பாறைகளால் எவரெஸ்ட் பகுதியில் தண்ணீர் விநியோகம் பாதிக்கும்.உருகும் பனிபாறைகள் நேபாளத்திற்கு குடிநீர் வழங்கும் தூத் கோசி ஆற்றில் நிரம்பும்.மோசமான கால நிலைகளால் பனியாறுகளின் நிறைந்துள்ள 99 சதவிகித இழப்பு காட்டுகிறது”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இப்படி பனி உருகுதலால் தொடக்கத்தில் நீராதாரம் பெருகுவது போல் தெரிந்தாலும், கோடை காலங்களில் நீராதாரம் வற்றும். இதனால் விவசாயம் மற்றும் நீர் மின்சாரத் திட்டங்களும் பாதிக்கப்படும். பனிச்சிகரங்கள் உருகுவதால் அதன் மிச்ச சொச்சங்கள் தடுப்பணை ஏற்படுத்தும் ஏரிகள் பல உருவாகும். பனிமலைச்சரிவும், பூகம்பங்களும் அணைக்கட்டுகளை உடைக்கும். பேரழிவு வெள்ள அபாயங்கள் தோன்றும். அதாவது கோசி படுகையில் நதியின் நீர்மட்டம் சாதாரண நிலையை விட 100 மடங்கு அதிகரிக்கும் என்று தெரிகிறது.

error: Content is protected !!