பாமக தொண்டர்களுக்கு 2017 போராட்டம் மிகுந்த ஆண்டு! – ராமதாஸ் அறிவிப்பு

பாமக தொண்டர்களுக்கு 2017 போராட்டம்  மிகுந்த ஆண்டு! – ராமதாஸ் அறிவிப்பு

திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக சார்பில் நேற்று புத்தாண்டு சிறப்பு பொதுக் குழு கூட்டம் மாநிலத் தலைவர் கோ.க.மணி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், தமிழ் புத்தாண்டிற்குள் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தலுக் கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும். தேர்தல் சீர்திருத்தங் களை விரைவுபடுத்த வேண்டும். தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடி யாக அமைக்க வேண்டும். மீனவர் களின் படகுகளை மீட்க நட வடிக்கை எடுக்க வேண்டும். ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உடனடியாக அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 12 தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

pmk dec 31

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பேசியதாவது:

இந்த இயக்கத்தில் கடந்த 1980-களிலிருந்து என்னோடு இணைந்து எதிர்பார்ப்பின்றி போராளியாக தொடர்ந்து வருகிறீர்கள். இந்தாண்டை (2017) உங்களுக்கு போராட்டம் மிகுந்த ஆண்டாக அறிவிக்கிறேன். ஒன்றிய அளவில் 100 இளைஞர்களை மக்களுக்காக போராட தயார் படுத்துங்கள்.முதற்கட்டமாக விவசாயிகள் பிரச்சினை தீர்க்கும் வகையில் மயிலாடுதுறை பகுதியில் ஜனவரிக் குள் போராட்டம் நடைபெறும். தற்போது தமிழக அரசியலில் வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்துக்கு ஒரு நல்ல இளந்தலைவரை கொடுத்துள்ளோம். நகரம், ஒன்றியம், மாவட்டம் அளவில் அனைவருக்கும் பா.ம.க. அரசியல் பயிலரங்கில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.நம்மை பார்த்து, திராவிட கட்சிகள் அச்சத்தில் உள்ளன. தமிழகத்தை முன்னேற்றக்கூடிய கட்சியாக நாம் உள்ளோம்” என்றார்.

கூட்டத்தில் அன்புமணி ராம தாஸ் பேசியதாவது:

தமிழக அரசியலில் இதுவரை இப்படி ஒரு சூழலைப் பார்த்த தில்லை. இதனை நாம் பயன் படுத்திக்கொள்ள வேண்டும். இது போன்ற வாய்ப்பு இனி வராது. மக்கள் இப்போது கோபத்திலும், குழப்பத்திலும், கொந்தளித்துக் கொண்டுள்ளனர். இந்தாண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெறா விட்டாலும் தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியாக வந்துள்ளோம். இதுவே வெற்றிதான். அடுத்த ஆண்டு இறுதியில் நடைபெறும் தலைமை பொதுக் குழுவில் தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக உருவாக வேண்டும் என்பது நம் இலக்கு. அடுத்த தேர்தலில் தமிழகத்தில் முதல் பெரிய கட்சியாக வர வேண்டும். அன்புமணியை பற்றி மக்கள் பேசுவது உங்களின் உழைப்பால்தான் வந்தது.

தமிழகத்தை ஆள்வது நம் இலக்கு அல்ல. தமிழகத்தை முன்னேற்றுவதே நம் இலக்கு. 5 ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் தமிழகத்தை முன்னேற்ற வேண்டும். மத்தியில் சுகாதாரத் துறையில் நாம் காட்டிய வழியை தற்போது பின்பற்றுகிறார்கள்.எனக்கு நம்பிக்கை உள்ளது. அடுத்த தேர்தலில் பாமக ஆட்சி அமைக்கும். வரும் 6 மாதத்தில் மிகப்பெரிய எழுச்சியை நாம் உருவாக்க போகிறோம். சமூக வலைத்தளங்களை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்” என்றார்.

Related Posts

error: Content is protected !!