பரிட்சை ரிசல்ட்டுலே ரேங்கிங் கட்! – மக்கள் ரியாக்சன்! – AanthaiReporter.Com

பரிட்சை ரிசல்ட்டுலே ரேங்கிங் கட்! – மக்கள் ரியாக்சன்!

முதல் இடம் / இரண்டாம் இடம் / மூன்றாம் உயர் மார்க் வாங்கினவங்களை அடையாளபடுத்தப்படாது ஜஸ்ட் மார்க் மட்டும் அறிவிக்கபடும்…தமிழக அரசு…..இதன் தாக்கம் என்னவாக இருக்கும்……..?!

 ravi may 12

1. நான் டாகடருக்கு படிச்சு இந்த நாட்டுக்கும் ஏழை மக்களுக்கு சேவை செய்வேன்ன்னு சொல்ற அட்டு புளுகை இனிமேல் எந்த பேப்பர்லயும், டிவிலையும் கேட்க வேண்டியது இல்லை………அப்படி சொல்ற பிள்ளைக கண்டிப்பா நீட் தேர்வு எதியிருந்தா கன்டிபபா இதே மாதிரி முதல் மூன்று இடத்தில் வந்திருக்காது என்பதை சத்தியமாக அடித்து கூறுவேன்.

2. வங்கி கடனை கட்டாதவங்களை கட்டம் கட்டி வங்கி வாசல்ல பிளக்ஸ் வைக்கும் முறை போல அல்லது ஜேப்பிடிகள் ஜாக்கிரதை என்பதை போல கட்டம் கட்டி ஒவ்வொரு ஸ்கூல் முன்னாடியும் பிளக்ஸ் வச்சி என்னை மாதிரி மக்கு பிளாஸ்த்ரியெல்லாம் உசுப்பேத்தி அதிக கட்டனம் கட்ட வச்சு அந்த ஸ்கூல்ல பிராய்லர் கோழிக்கணக்கா மேய்ய்ச்சலுக்கு விடும் பெற்றோர்களுக்கும் மாணவர்களுக்கும் நிம்மதி…..போந்தா கோழி ஸ்கூல்களுக்கு நஷ்டம்.

3. லேடன் தெரியுமா? பின்ன்ன்ன்ன்ன்ன்ன் லேடன்ன்னு கேக்குற மாதிரி இனிமே நாந்தான் ஸ்டேட் பர்ஸ்ட், ஸ்கூல் ஃபர்ஸ்ட்னு அடிச்சு விட மாணவர்களுக்கு இன்னுமொரு அற்புத வாய்ப்பு…….

4. இந்த மாணவர் தான் முதல் இரண்டு மூன்று என்று வரிசைபடுத்தி எக்ஸ்குளுஸிவ் என்று வாட்டர் மார்க் போட்டு ஒவ்வொரு டிவிலேயும் விதவிதமாக மாணவர்களை காட்டி டேய் எவந்தான்டா ஃபர்ஸ்ட்னு குழப்ப ஒரு வசதி……

5. நான் கச்ட்பட்டு படிச்சேன், என் பெற்றோர் / டீச்சர் தான் காரணம் காராசேவ்னு, வாயில முழு லட்டை தினிச்சுகிட்டே பேட்டி கொடுக்கும் கொடுமை இருக்காது அப்படி சொன்னா உடனே மூதேவி மூடு…..இதெல்லாம் இருக்கட்டும் முதல்ல நீட் பாஸ் பண்ணுவியான்னு பார்னு மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவுக்கு சம்முகமூம் ரெடியா இருக்கு……..

கடைசியா ஒண்ணுய்யா…….பேப்பர் வர்ரவரைக்கும் கெத்தா இருந்திட்டு பேப்பர்ல நம்ம நம்பர் காணும்னு சொன்ன நண்பனை டேய் நம்ம நம்பர் ஃப்ர்ஸ்ட் எடிஷன்ல மிஸ் ஆகியிருக்கும்டா ஈவ்னிங் ரெகுலர் பேப்பர்ல வரும்டான்னு, தோத்து போன மேட்ச்சை ஹைலைட்ல ஜெயிச்சிரும்னு நம்பற என்ன மாதிரி க்ரீன் ஸான்டுகளுக்கு கொஞ்சம் போதாக்காலம் ஏன்னா குறுஞ்செய்தி அனுப்புறாங்களாம் இந்த அதிகாரிகள்,,,,,,,,விளங்கிடும்………

PS – என் பையன் பாஸாயிட்டான் / என் பொண்ணு பாஸாயிட்டான்னு வாழ்த்துங்க ரவின்னு ….. போன‌ வருஷம் +2 பாஸான என்னை போல யூத்களிடம் வந்து சொல்லாதீங்க அப்புறம் அங்கிள் ஆன்ட்டினு கூப்ட்றுவேன் பாத்து நடந்துக்கோங்க பிரண்ட்ஸ்!