18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது!.

18 இந்தியர்கள் & 23 கப்பல் மாலுமிகளுடன் சென்று கொண்டிருந்த எண்ணெய்க் கப்பலை ஈரான் சிறை பிடித்துள்ளது!.

18 இந்தியர்கள் உட்பட 23 கப்பல் மாலுமிகளுடன் ஈரான் அருகே ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரிட்டனுக்கு சொந்தமான ஸ்டெனா இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். ஈரானின் இந்த செயலுக்கு பிரிட்டன், அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் இரண்டு பெட்ரோலிய சரக்கு கப்பல்களை ஈரான் கடற்படை பறிமுதல் செய்துள்ளது. சர்வதேச கடல் விதிமுறைகளை அவை மீறியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது. முதலில் stena impero என்ற ஒரு சரக்கு கப்பலை பறிமுதல் செய்திருப்பதாக ஈரான் அரசு அறிவித்தது. ஆனால் MV Masdar என்ற மற்றொரு கப்பலையும் ஈரான் கடற்படையினர் பிடித்துச் சென்றதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இங்கிலாந்து அரசும் ஈரான் அரசைத் தொடர்பு கொண்டு விளக்கம் கோரியுள்ளது. நிலைமையை கண்காணித்து வருவதாகவும், வளைகுடாவில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் இங்கிலாந்து அரசு செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் கச்சா எண்ணெயை சிரியாவுக்கு கடத்திச் செல்ல முயன்றதாக இம்மாத தொடக்கத்தில் ஒரு சரக்கு கப்பலை இங்கிலாந்து கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இதற்கு பதிலடியாக ஈரான் இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இப்பிரச்சினை காரணமாக பிரிட்டன் ஈரான் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் கப்பலை கைப்பற்றியது தொடர்பாக ஈரான் புரிட்சிகர காவல்படையினர் தங்கள் செபாநியூஸ் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் ‘‘பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஒரு மீன்பிடி படகின் மீது மோதியதால் சர்வதேச கடல் விதிகளின்படி அந்த கப்பலை கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று ஹோர்மோஸ்கன் துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுவனங்களிடம் இருந்து கோரிக்கைகள் வந்தன. அதன் அடிப்படையில் அந்த கப்பல் துறை முகத்துக்கு கொண்டுவரப்பட்டு சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள கடல் போக்குவரத்து நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது’’ என்று ஈரான் காவல்படை தெரிவித்துள்ளது.

ஆனால் கப்பலின் உரிமையாளர்களான ஸ்டெனா பல்க் மற்றும் நார்தர்ன் மரைன் மானேஜ்மண்ட் தங்கள் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியில் தாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.சர்வதேச கடல்வழியாக ஸ்டெனா இம்பெரோ பயணித்து கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத சிறிய படகுகளாலும் ஒரு ஹெலிகாப்ட்டராலும் எங்கள் கப்பல் தாக்கப்பட்டது. அதன் பின் எங்கள் கப்பலில் இருப்பவர்களுடன் எங்களால் தொடர்புகொள்ள முடியவில்லை என்று கப்பல் உரிமையாளர்கள் கூறினர்.

ஈரான் காவல்படையினர் கைப்பற்றிய எண்ணெய் கப்பலில் 23 மாலுமிகள் உள்ளனர். அவர்களில் கப்பலின் கேப்டன் உட்பட 18 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் ரஷ்யா, லாட்வியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரையும் மீட்க பிரிட்டன் மற்றும் சுவீடன் அரசுகளுடன் பேசி வருகிறோம் என கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!