சீனா ; டிராகன் போட்டி பயிற்சியில் ஈடுபட்ட 2 படகுகள் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி!

சீனா ; டிராகன் போட்டி பயிற்சியில் ஈடுபட்ட 2 படகுகள் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலி!

இந்திய எல்லையில் நம்முடன் அடிக்கடி மோதும் போக்கை இன்று வரை கை விடாத சீனாவில் டிராகன் படகு பந்தயத்துக்கான பயிற்சியில் ஈடுபட்ட 2 படகுகள் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி பலியாகி உள்ளனர்,

இந்த சர்வதேச புகழ் பெற்ற டிராகன் படகு திருவிழா (சீன: மொழியில் லோங்ச்சுவாஜீ), துவேன் ங், டுவாவூ திருவிழா அல்லது சோங்ஷியாவ் திருவிழா என்றும் அறியப்படுகின்றது. இந்த திருவிழா ஒருவரின் நாட்டுப்பற்றையும் பெற்றோர் மீதான பற்றையும் கொண்டாடும் ஒரு விழாவாக கருதப்படுகின்றது. பாரம்பரியமாக, இந்த விழா, சீனர் லுனார் நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாளில் கொண்டாடப்படுகின்றது. அதனால்தான், அனைத்துலக நாட்காட்டியில் இத்திருவிழாவின் தேதி ஒவ்வொரு வருடமும் மாறி வரும். இந்த டிராகன் திருவிழா, மலேசிய சீனர்கள், சீங்கப்பூரியர்கள் மற்றும் தைவான் மக்களிடையே ‘ஐந்தாவது மாத திருவிழா’ அல்லது ‘டம்பிளிங் திருவிழா’ என்றும் அழைக்கப்படுகின்றது. சீன ஹோக்கியன் சமூக மக்களிடையே இவ்விழா பேச்சுன் என்று அறியப்படுகின்றது.

டிராகன் திருவிழாவின் தோற்றம் பற்றி மூன்று விதமான கதைகள் இருக்கின்றன. இந்த மூன்று கதைகளும் துயரமான ஏறக்குறைய ஒரே மாதிரியான முடிவுகளையே கொண்டுள்ளதுடன் நம்மைச் சிந்திக்க வைக்கும் நன்னெறி பாடங்களையும் அடக்கியுள்ளன.

முதல் கதை: க்யூ யுவனின் புராணக்கதை (340 – 278 கி.மு) – இரக்கமுள்ள பிரபு
An artists portrayal of Qu Yuan

க்யூ யுவனின் கதை எல்லோராலும் மிகப் பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட டிராகன் படகு திருவிழா தோன்றிய கதையாகும். க்யூ யுவன், பண்டைய கால சீனா நாட்டிலிருந்த ச்சு மாநிலத்தில் வாழ்ந்த இரக்க குணம் நிறைந்த பிரபு ஆவார். சிமா கியானின் மாபெரும் வரலாற்றாசிரியர்கள் பதிவுகளின் படி, அவர் ஒரு ராஜ குடும்பத்தைச் சார்ந்தவர் ஆவார். ஆரம்பத்தில், ச்சுவின் அரசரான ஹுவாயின் ஆட்சிக் காலத்தில் அதாவது 328-299 கி.முவில் அவர் மந்திரியாக பணியாற்றினார். சில ஊழல் நிறைந்த மந்திரிகளின் தாக்கத்தினால், அரசர் ஹுவாய், க்யூ யுவனை ஹன் நதியின் வடக்குப் பிரதேசத்திற்கு நாடு கடத்தினார். அதன் பின்பு, அவரின் பதவி அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டு ச்சு மாநிலத்திற்கும் அண்டை அரசனான குய் மாநிலத்திற்குமிடையே நல்லுறவை மேம்படுத்தும் பணியில் அமர்த்தப்பட்டார்.

அரசர் ஹுவாய் மறைந்ததும், அவரின் வாரிசான அரசர் குயிங்சியான் அரியணை ஏறினார். குன் மாநிலம், ச்சு மாநிலத்தைத் தாக்கக்கூடும் என்பதை உணர்ந்த க்யூ யுவன், அவர்களை எதிர்ப்பதற்கு அரசரை குய் மாநிலத்துடன் இணையுமாறு ஆலோசனை கூறினார். அந்த காலகட்டத்தில் பிரதமராக இருந்த சிலான் இந்த ஆலோசனையைக் கேட்டு அதிருப்தி அடைந்தார். அவர் அரசர் குயிங்சியானை க்யூ யுவானுக்கு எதிராக திருப்பினார். அரசர், பிரதமரின் ஆலோசனையைக் கேட்டதனால் க்யூ யுவன் மீண்டும் ஒரு முறை நாடு கடத்தப்பட்டார். இம்முறை யாங்சே நதியின் தெற்கு பகுதிக்கு அனுப்பப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட காலத்தில், க்யூ யுவான் அவரின் பெரும்பாலான நேரத்தை, நாட்டுப்புற பாடல்கள் மற்றும் புராணங்களைச் சேகரிப்பதிலும் அவரின் நாட்டுப்பற்றைப் பற்றி கவிதை எழுதுவதிலும் செலவிட்டார், இன்று, அவரின் சில படைப்புகள் சீன இலக்கியங்களில் மிகச் சிறந்த படைப்புகளாகக் கருதப்படுகின்றது.

உள்ளூர் கிராமப்புற மக்கள் க்யூ யுவனின் மீது அதீத மரியாதை வைத்திருந்தனர். இதற்கு காரணம், அவர்கள் அவரை விவேகமான வராகவும் இரக்க குணமுள்ளவராகவும் பார்த்தனர். க்யூ யுவன், ச்சு மாநிலத்திற்கு எதிரான தாக்குதல் குறித்த தனது கணிப்பை எண்ணி மிகவும் கவலைப்பட்டார். இந்த கவலை அவரின் உடல் நலத்தை வெகுவாக பாதித்தது.

278 கி.முவில், க்யூ யுவனின் பயம் உண்மையில் நடந்தது. குன் மாநிலத்தின் படைத்தளபதியான பாய் குய், ச்சுவின் தலைநகரான யிங் நகரத்தைக் கைப்பற்றினார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட, க்யூ யுவன் ‘யிங்கின் புலம்பல்’ என்ற ஒரு கவிதையை எழுதி விட்டு, மிலு நதியில் அதாவது இப்பொழுது சீனாவிலுள்ள ஹுனான் பகுதியில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். க்யூ யுவனின் தற்கொலையைப் பற்றி கேள்விப்பட்ட உள்ளூர் கிராமப்புற மக்கள் மிலு நதிக்குச் சென்று அவரை காப்பாற்ற முயற்சி செய்தனர். அவர்கள் தங்களின் படகுகளில், பறைகளை (டிரம்சு) அடித்துக் கொண்டே க்யூ யுவனைத் தேடினர். க்யூ யுவனுக்கான இந்த தீவிரமான தேடலே டிராகன் படகு திருவிழாவின் தோற்றமாக மாறியது.

க்யூ யுவனின் உடலைத் தேடும் பணியின் போது, தீய சக்திகளிடமிருந்தும் நதியில் இருக்கும் உயிரினங்களிடமிருந்தும் அவரின் உடலைப் பாதுகாக்க, கிராம மக்கள் ரைஸ் போல்ஸ்களை நதியில் வீசினர். பிறகு, க்யூ யுவன் அவரின் தோழர்களின் கனவில் வந்து தன்னுடைய மரணத்திற்கான காரணத்தை விளக்கிய பின், டிராகனை அமைதிப்படுத்த ரைஸ் போல்ஸ்களை முக்கோண வடிவிலான பட்டுப் பொட்டலத்தில் மடிக்கச் சொன்னார். க்யூ யுவனின் நண்பர்கள் இந்த தகவலை மக்கள் அனைவருக்கும் பரப்பினர். அன்றையிலிருந்து முக்கோண வடிவிலான ரைஸ் போல்ஸ் பொட்டலங்களை சீன நாட்காட்டியின் ஐந்தாவது மாதத்தில் ஐந்தாவது நாள், டிராகனுக்கு படைக்கும் பாரம்பரியம் தொடங்கியது. இன்று, முக்கோண ரைஸ் போல்ஸ் பொட்டலங்கள் இலைகளில் மடிக்கப்படுகின்றன. அவை ஸோங்சி என்று அழைக்கப்படுகின்றன.

இரண்டாம் கதை: வூ ஷிசு (அறியப்படாத காலம் – 484 கி.மு) -தனது குருவால் விலக்கப்பட்ட பிரபு
An artist’s portrayal of Wu Zixu, Duke of Shen

சிமா கியானின் மாபெரும் வரலாற்றாசிரியர்கள் பதிவுகளின்படி, வூ ஷிசு ஷேன்னின் பிரபு அல்லது ஷேன் சு என்றும் அழைக்கப்படுகின்றார். வூவின் அரசர் ஹேலுவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஆலோசகராக திகழ்ந்த வூ ஷிசு, போ பையின் சந்தேகப்படத்தக்க குணங்களைப் பற்றிய எச்சரிக்கைகளையும் தாண்டி, அவரை பிரதமராக பதவி உயர்வு கொடுக்க பரிந்துரைத்தார். அரசர் ஹேலுவின் மறைவிற்குப் பின், வூ ஷிசுவால் புதிய அரசரான வூச்சையுடன் ஒரு சுமூகமான உறவை வளர்க்க முடியவில்லை. யூவேவின் அரசரான கோஜியான் என்றாவது ஒரு நாள் வூ மாநிலத்தைத் தாக்கக்கூடும் என்றுணர்ந்த வூ ஷிசு, அரசர் வூச்சையை யூவே மாநிலத்தைக் கைப்பற்றுமாறு அறிவுரை கூறினார். ஆனால், அரசர் இதை நம்பவில்லை. அரசர் வூச்சை, போ பியின் அறிவுரையைக் கேட்டார். போ பி இரண்டு இராஜ்ஜியத்திற்கும் இடையில் சமரசம் பேசினார். ஆனால், நிலைமையை கையாள்வதற்காக யூவின் அரசர் போ பிக்கு லஞ்சம் கொடுத்திருந்தது எவரும் அறியவில்லை.

வூ ஷிசு, அரசர் வூச்சையைத் தன் அறிவுரையைக் கேட்கும்படி கெஞ்சினார். ஆனால், இது அவரை கோபத்திற்குள்ளாக்கியது. அரசர், வூ ஷிசுவிடம் ஒரு வாளைக் கொடுத்து தற்கொலை செய்து கொள்ளும்படி உத்தரவிட்டார். மரணிப்பதற்கு முன், வூ ஷிசு தன் கணிப்பு உண்மையாவதை தான் காண வேண்டுமென்பதற்காக, மரணத்திற்கு பிறகு தனது கண்களை நகரத்தின் நுழைவாயிலில் வைக்கும்படி கோரிக்கை விடுத்தார். ஆனால், அரசர் வூச்சை, ஐந்தாவது மாதத்தின் ஐந்தாவது நாளில் வூஷிசுவின் உடலை நதியில் வீசும்படி உத்தரவிட்டார். வூ ஷிசு மரணமடைந்து ஏறத்தாழ 10 மாதத்திற்குப் பின், அவரின் கணிப்பு உண்மையானது. அரசர் வூச்சை குய் மாநிலத்துடன் போரில் இருக்கும் பொழுது, யூவேவின் அரசர் கோஜியான் தாக்குதல் புரிந்து வூ மாநிலத்தைக் கைப்பற்றினார். மனமுடைந்து போன அரசர் வூச்சை, மரணத்திற்குப் பின்னான வாழ்வில் வூ ஷிசுவைப் பார்க்க வெட்கப்பட்டு, தனது கண்கள் மூடப்பட்ட நிலையில் தற்கொலை புரிந்து கொண்டார். அரசர் வூச்சைக்கு செய்த தேச துரோகத்திற்காகவும் வெளி மாநில அரசிடம் இலஞ்சம் வாங்கியதற்காகவும் போ பியை அரசர் கோஜியான் தண்டித்தார். இன்று வரை, டிராகன் படகு போட்டியின் போது குறிப்பாக சீன கிழக்கு மத்திய கடலோர மாநிலங்கள், வூஷிசுவை நினைவு கூருகின்றனர்.

மூன்றாவது கதை: சாவோ ஈ (130 – 143 கி.மு) தந்தையை இழந்த பெண்

சாவோ ஈ என்பவர் மதக்குரு சாவோ ஷுவின் மகளாவார். ஒரு நாள், வூ ஷிசுவின் நினைவு நாளையொட்டி சடங்குகள் செய்து கொண்டிருக்கையில் சாவோ ஷு தவறி ஷுன் நதியில் விழுந்து விட்டார். மனமுடைந்து போன சாவோ ஈ பல நாட்கள் தனது தந்தையை நதியில் தேடினார். அச்சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்களுக்குப் பிறகு, சாவோ ஈ மற்றும் சாவோ ஷுவின் உடல்கள் அந்நதியில் கிடந்தன.

எட்டு வருடங்களுக்குப் பிறகு, உள்ளூர் மக்கள், காவோ ஈயின் தந்தைப் பாசத்தை நினைவு கூறும் வகையில் ஷங்யூவில் ஒரு கோயிலைக் கட்டினார்கள். அதோடு, ஷுன் நதியை காவோ ஈ நதி என அவரின் நினைவாக மறுபெயரிட்டனர். காவோ ஈயின் தியாகம் டிராகன் படகு திருவிழாவின் போது குறிப்பாக சீனாவின் வடகிழக்கு ஜேஜியாங்கில் நினைவு கூறப்படுகின்றது.

சீன அரசர் காலத்தில் தங்களின் செல்வாக்கைப் பெருக்கி கொள்வதற்காக கன்பூசிய சிந்தனையாளர்கள் இந்த புராணக்கதைகளை ஊக்குவித்ததாக சில வாதங்கள் இருக்கின்றன. 20-ஆம் நூற்றாண்டின் அறிஞரான, பேராசிரியர் வென் இடுஹோவின் கருத்துப்படி, டிராகன் படகு திருவிழா டிராகன் வழிபாட்டின் மூலம் தோன்றிய பாரம்பரியமாகும். டிராகன் படகு போட்டி, டிராகனுக்கு மரியாதை செலுத்தும் ஒரு செயலாகவும் உலகத்தின் ஆண் சக்தியின் அடையாளமாகவும் நடத்தப்படுகின்றது. ஸோங்சி, டிராகன் அரசனுக்கு வழங்கப்படும் படையலாகும். பண்டைய கால சீனர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தைப் பெரிதும் நம்பி இருந்ததால், வானிலை மிகப்பெரிய பங்கை ஆற்றியது. வானிலையைக் கட்டுப்படுத்தும் திறமை டிராகன்களுக்கு இருப்பதாகாவும் அதனால் விவசாயத்தின் விளைச்சல் நேரடியாக பாதித்ததாகவும் சொல்லப்பட்டது. டிராகன்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதன் மூலம் நல்ல வானிலை அமைவதோடு அதனால் ஏற்படும் நல்ல அறுவடையின் மூலம் உள்ளூர் சமூகத்தினரின் வாழ்வாதாரமும் அமைந்திருந்தது. டிராகன் ஓர் அடையாளமாக வூ மற்றும் யூவே மாநிலங்களில் வியாபித்திருந்தது. பேராசிரியர் வென் இடுஹோவின் கருத்துப்படி, டிராகன் படகு திருவிழா வூ மற்றும் யூவே மாநிலங்களின் மிகவும் தனித்தன்மை வாய்ந்த வழக்கமாகும் ஆனால், காலப்போக்கில் அது சீனா நாடு முழுதும் பிரசித்தி பெற்றது.

எப்படி மற்றும் ஏன் இந்த புராணக் கதைகள் விளம்பரப்படுத்தப்பட்டன என்பதை பொருட்படுத்தாமல் இன்று வரை டிராகன் படகு திருவிழா தொடர்ந்து கொண்டாடப்படுகின்றது.

இது சீனாவின் பாரம்பரிய திருவிழாவாக இருந்தாலும், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. சீனாவின் அராஜக ஆட்சியாளர்களுக்கு எதிராகப் போராடிய கியூ யுவான் என்பவரை ஆற்றில் கட்டிப் போட்டார்கள் . அப்போது கியூவை காப்பாற்றவும், மீன்கள் அவர் உடலைக்கடித்துக் குதறாமல் இருக்கவும் மேளம் கொட்டி மக்கள் ஆற்றில் கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இந்த புராணக்கதையை அடிப்படையாக கொண்டு டிராகன் படகு போட்டி நடத்தப்படுகிறது என்றும் இன்னொரு சாரார் சொல்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=XIr4x7DSki0

இந்நிலையில் இந்த வருடம் ஜூன் 18ந்தேதி இதற்கான போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கு பெறுவதற்காக சிலர் நீண்ட, குறுகிய வடிவிலான படகுகளில் பயிற்சி மேற்கொண்டனர். அவர்கள் பயணம் செய்த படகு ஒன்று கிலின் நகரருகே ஆற்றில் சென்றபொழுது நீரின் ஓட்டம் அதிகரித்து உள்ளது. இதில் சிக்கிய படகு கவிழ்ந்தது. இதேபோன்று மற்றொரு டிராகன் படகும் பயிற்சி மேற்கொள்பவர்களுடன் சென்று சிக்கி கவிழ்ந்தது.

இதில் 57 பேர் நீருக்குள் மூழ்கினர். அவர்களில் 17 பேர் பலியாகி உள்ளனர். நீரில் மூழ்கியவர்களை மீட்பதற்காக 200 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். உயிர்காப்பு கவசம் அணியாமல் பலர் சென்ற நிலையில் பலியானது தெரிய வந்துள்ளது. இதுபற்றி விசாரணை மேற்கொண்ட போலீசார் 2 பேரை கைது செய்துள்ளனர்.

Related Posts

error: Content is protected !!