சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை ’சர்வதேச திரைப்பட விழா” – AanthaiReporter.Com

சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை ’சர்வதேச திரைப்பட விழா”

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா’ சென்னையில் வரும் டிசம்பர் 13 முதல் டிசம்பர் 20 வரை நடைபெறவுள்ளது. ‘இண்டோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷனால்’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இவ்விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரைப்படங்கள் தேவி சினிப்ளக்ஸ், அண்ணா தியேட்டர், கேசினோ, சத்யம் சினிமாஸ்,  தாகூர் திரைப்பட மையம், ரஷியன் அறிவியல் மற்றும் கலாச்சார மையம் ஆகிய திரையரங்குகளில் திரையிடப்படவுள்ளது.  இத்திரைப்பட விழாவில் தமிழ் படங்களின் போட்டி பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட விண்ணப் பங்கள் ஊடகங்கள் வாயிலாக அக்டோபர் 7-ம் தேதி அனுப்பப்பட்டு, நவம்பர் 15-ம் தேதிவரை விண்ணப்பிக்க அவகாசம் கொடுக்கப்பட்டது.

இவ்விழாவில் கலந்து கொள்ள தமிழ் படங்கள் 16 அக்டோபர் 2017 முதல் 15 அக்டோபர் 2018 தேதிக்குள்ளாக படம் தணிக்கை செய்யப்பட்டிருக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த விதிமுறையின் கீழ் விண்ணப்பித்த 20 தமிழ் படங்களில் இருந்து தேர்வு குழுவினர் 12 படங்களை தேர்வு செய்தனர்.

அதன்படி, ‘96’, ‘அபியும் அனுவும்’, ‘அண்ணனுக்கு ஜே’, ‘ஜீனியஸ்’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’, ‘இரும்புத்திரை’, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மெர்க்குரி’, ‘பரியேறும் பெருமாள் பி.ஏ.பி.எல்.’, ‘ராட்சசன்’, ‘வடசென்னை’, ‘வேலைக்காரன்’ ஆகிய திரைப்படங்கள் இந்த 2018 சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ்ப் படங்களுக்கான போட்டி பிரிவில் திரையிடப்படவுள்ளன.

சிறந்த தமிழ்ப் படங்களை தேர்வு செய்யும் நடுவர் குழுவில் இயக்குநர்கள் விக்ரமன், காயத்ரி புஷ்கர், சுகந்த் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தொடக்க விழா : கலைவாணர்அரங்கம் (டிசம்பர் 13, 2018, 6:15 மணி)

நிறைவு விழா: கலைவாணர்அரங்கம் அல்லது தேவி தியேட்டர் (டிசம்பர் 20, 2018, 6:15 மணி)

16-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் சிறப்பம்சங்கள்

நாடுகளின் எண்ணிக்கை : 59

படங்களின் எண்ணிக்கை : 150

விருந்தினர்கள் : தில்லி, மும்பை, பெங்களூர் மற்றும் சென்னை ஆகிய நகரங்களில் உள்ள வெளிநாட்டு தூதரக அதிகாரிகள்

எதிர்பார்க்கப்படும் பிரதிநிதிகள் திரு. ரசூல் பூக்குட்டி (சவுண்ட் டிசைனர்),  இயக்குநர் ஷில்பா(சிங்கப்பூர்), இயக்குநர் அபுஷே ஹெட் எமோன்(வங்காளதேசம்), இயக்குநர் நைனா சென் (ஆஸ்திரேலியா)

முதல் திரைப்படம் – கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம்டி’ஆர் வென்ற ஷாப்லிப்டர்ஸ் (ஜப்பான்)

பங்கு பெறும் பிற விருது வெற்றி திரைப்படங்கள் :

1) டச்மிநாட் (ரோமானியா) – பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் கோல்டன்    பெர்லின் பியர் விருது பெற்ற திரைப்படம்.

2) கோல்ட்வார் (போலந்து) – கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது பெற்ற திரைப்படம்.

3) டாக்மேன் (இத்தாலி) – கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற திரைப்படம்.

4) யோமேடின் (எகிப்து) – கேன்ஸ் திரைப்பட விழாவில் பிரான்சு வாசலாஸ்     விருது பெற்ற திரைப்படம்.

5) அட்வார் (பிரான்ஸ்) – கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம்டி’ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்.

6) ஹுயுமன், ஸ்பேஸ், டைம் அண்ட் ஹுயுமன் (தென் கொரியா) – பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்ற திரைப்படம்

7) இன்திபேட் (ஜெர்மனி) – 2017 கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான வெற்றி பெற்ற திரைப்படம்.

8) கேர்ள்ஸ்ஆப்திசன் (பிரான்ஸ்) – கேன்ஸ் திரைப்பட விழாவில் பாம்டி’ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரைப்படம்.

9) மக் (போலந்து) – பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவில் சில்வர் பெர்லின் பியர் விருது பெற்ற திரைப்படம்.

10) ராபிகி (கென்யா) – கேன்ஸ் திரைப்பட விழாவில் குயீர் பாம் விருதுக்கு பரிந்துறைக்கப்பட்ட திரைப்படம்.

11) வுமன் அட்வார் – ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஐஸ்லாண்டிக் திரைப்படம்

12) வாட் வில் பீப்பள்சே (நார்வே) – இந்திய ப்ரிமியர்

கான்டெம்போரரி ஜெர்மன் சினிமா – 5 படங்கள் (kind courtesy Goethe-Institut, Chennai)

ரெட்ரோஸ்பெக்டிவ் திருபாதி அகின்-  6 படங்கள் (kind courtesy Goethe-Institut, Chennai)

கான்டெம்போரரி பிரேசிலியன் சினிமா – 3 படங்கள் (kind courtesy Embassy of Brazil, New Delhi)

கண்ட்ரிபோகஸ் – 4 படங்கள் (சிட்டி ஆப் காட் படம் உட்பட)  (kind courtesy Embassy of Brazil, New Delhi)

கான்டெம்போரரி ஆஸ்திரேலியன் சினிமா – 4 படங்கள்  (kind courtesy Australian Consulate, Chennai)

ஆஸ்திரேலியன் காமெடி ரிட்ரோ படங்கள் – 4 படங்கள்  (kind courtesy Australian Consulate, Chennai)

போட்டியிடும் தமிழ் படங்கள் – 12

இந்திய பனோரமா : 12 படங்கள் (தி சவுண்ட் ஸ்டோரி – இந்திய ப்ரிமியர் படம் உட்பட)

சிறப்பு திரையிடல் – மேற்கு தொடர்ச்சி மலை (தமிழ்)

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் முதல் முறையாக

1) ஸாம்பியா –  ஒரு படம் (தெற்கு ஆப்பிரிக்கா)

2) GRULAC – 13 படங்கள் (லத்தீன்அமெரிக்கா மற்றும் கரிபியன் நாடுகள் ) COSTA RICA மற்றும் TRINIDAD &  TOBAGO உட்பட (முதல்முறையாக)

3) LADAKH – ஒரு படம் (இந்திய பனோரமா பிரிவில்)

4) கென்யா – ஒரு படம்

Delegate Registration

For Students, Film Industry and Senior Citizens – Rs.500/- (Plus one Photo, with Identity)

For Others – Rs.1000/- With Photo

Direct Registration at Devi Cineplex – Daily between 10:30 am to 6:00 pm

Online Registration – www.icaf.in / www.chennaifilmfest.com / www.bookmyshow.com