15வது உலகத்தமிழ் இணைய மாநாடு!

15வது உலகத்தமிழ் இணைய மாநாடு!
அமெரிக்காவினை தலைமையிடமாக கொண்டு செயல்படும் உலகத்தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றமும் (உத்தமம்), காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் 15-ஆவது உலகத்தமிழ் இணைய மாநாடு வரும் செப்டம்பர் 9,10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இம்மாநாட்டில் ஆய்வரங்கம், மக்கள் அரங்கம் மற்றும் கண்காட்சி அரங்கம் என்ற மூன்று பிரிவுகளின் கீழ் மாநாடு நடைபெற உள்ளது.
edu aug 26
 
15வது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக ஆய்வரங்கம் நடைபெற உள்ளது. இந்த ஆய்வரங்கத்தில் இயந்திரக் கற்றல், உள்ளார்ந்த இயந்திரக்கற்றல், உரையிலிருந்து எழுத்தாக மாற்றும் தொழில்நுட்பம், தமிழ்வழிக் கல்வி, என பல தலைப்புகளின் கீழ் உலகின் பல நாடுகளிலிருந்து தமிழ் ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் கல்லூரி விரிவுரையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பிக்கின்றனர்.
 —————————–——————————————————
ஆய்வரங்க பார்வையாளராக கட்டணம் 
உத்தமம் உறுப்பினர் : ரூ.2000
உத்தமம் அல்லாதவர்கள்  : ரூ.3000
மாணவர்கள் கட்டணம் : ரூ.2000
 —————————–———————————————————
ஆய்வரங்கத்தோடு இணைந்தததாக பயிலரங்குகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
அதிநவீன தொழில்நுட்பங்களை போதிக்க துறை சார்ந்த வல்லுநர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கின்றனர். கீழே அதன் விபரம்
 
Tutorial on 11.09.2016
 
1. Machine Translation
 
Machine Translation by Prof. Kavi Narayana Murthy : 
 
fees : Rs.500
 
Tutorial 2: Text to Speech Synthesis in Tamil
 
Text to Speech Synthesis in Tamil by Prof. T Nagarajan Rs. 500
 fees : Rs.500
 
 Pre-Conference Tutorial  08-09.2016
 
Tamil Language Processing Applications and Tools   – Rs.500
Pre- Conference Tutorial on ‘Tamil Language Processing Applications and Tools’
 
Instructors: Dr.T.Mala, Dr.M.Vijayalakshmi, Dr.S.Abirami, Mr.D.Narasimhan
 
Affiliation: Department of Information Science & Technology
 
CEG, Anna University,
 
Chennai – 600 025.
 
2. Python நிரலாக்கப் பயிற்சி Rs.300
பயிற்சியாளர் : த.சீனிவாசன்.
 
கட்டற்ற மென்பொருள் ஆர்வலர்.
Kaniyam.com இணைய இதழ் ஆசிரியர்.
FreeTamilEbooks.com மின்னூல் வெளியீட்டாளர்.
 
 கணிணியில் நிரல்களை எளிதாக உருவாக்க உதவும் மொழி பைதான். கட்டற்றமென்பொருளான இந்த மொழி மூலம் எளிய கணக்கீடு மென்பொருட்கள் முதல்,சிக்கலான இணைய தளங்கள், மொழியியல் ஆய்வுக் கருவிகள், விளையாட்டுகள்,அறிவியல், கணித, வரைகலை மென்பொருட்கள், திறன்பேசி செயலிகள் வரை எதையும்உருவாக்கலாம்.
 
பைதான் மொழியின் அறிமுகம், அதன் கூறுகள், எளிய நிரல்கள் உருவாக்குதல்,
தமிழுக்கான மொழியில் நிரல்கள் உருவாக்கம் ஆகியன பற்றி இந்தப் பயிலரங்கில்கற்கலாம்.
 
3. ஆசிரியர்களுக்கான தொழில்நுட்பப்பயிற்சி  Rs.300
 
கணிணியின் நழுவல் காட்சிகளைப் பயன்படுத்திச் சிறுச்சிறு விளையாட்டுகள், வினாடி வினாக்கள் அமைத்து வகுப்பறையில் குழந்தைகளுக்குப் பாடங்களைக்கற்பிக்கக் கணினியை ஒரு துணைக் கருவியாகப் பயன்படுத்துவது எப்படி என்று கற்றுத் தரப்படும். இணைய வசதிகள் உள்ள, பள்ளி ஆசிரியர்கள் Edmodo,kahoot ஆகியஇணையக் கருவிகளைப் பயன்படுத்தித் தங்கள் வகுப்புப் பாடங்களை மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் ஆசிரியர்களுக்கு வழிகாட்டப்படும்.
 
பயிற்சியாளர்: திருமதி : சுகந்தி  (3:30  to 5;30 pm)பதிவுகட்டணம் Rs 300
 
Registration is limited to  30 people – Register early,
 
முன்பதிவுசெய்யும் 30 பேருக்குமட்டுமே பயிலரங்கத்தில்இடம்உ ண்டு
 
கண்காட்சி அரங்கம்
 
மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை கண்காட்சி அரங்கமாக வைத்துக்கொள்ளலாம். அதொடு பொது மக்கள் இலவசமாக இந்த கண்காட்சி அரங்கத்தினை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
INFITT Members : Rs.5000/-
Non-Infitt Members Rs.7000
 
“மக்கள் அரங்கம்” –
       15 ஆவது உலகத்தமிழ் இணைய மாநாட்டின் ஓர் அங்கமாகச் செல்பேசிச் செயலிகளை உருவாக்குதல், இயந்திரக் கற்றல், கட்டற்ற மென்பொருள்கள் ஆகிய தொழில்நுட்பங்களில் இலவசப் பயிற்சி வழங்கப்படவிருக்கிறது. பொதுமக்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோர் அதில் கலந்து கொள்ளலாம்.
          கூகிள்(Google), மைக்ரோசாஃப்ட்(MicroSoft), பேஸ்புக்(Facebook) ஆகிய நிறுவனங்களின் பிரதிநிதிளும் மாநாட்டில் பங்கேற்று நிறுவனங்களுக்குப் புத்தாக்கத்  தொழில்நுட்பப் பயிற்சி அளிக்கவுள்ளனர்.
         திண்டுக்கல், அதனை சுற்றியுள்ள  திருச்சி, மதுரை, தேனி, கரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அனைத்துக் கலை, பொறியியல் கல்லூரி கலந்துகொள்ளலாம் 
 
மக்கள் அரங்கம் பொதுமக்களுக்கு இலவசம், இங்கே பலதரப்பட்ட பயிற்சிகள் இலவசமாக வழங்கப்படும். ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் பயிற்சிகள் வழங்கப்படஉள்ளது
 
மேலும் விபரங்களுக்கு
 
செல்வமுரளி
செயல் இயக்குநர்
99430-94945
Selva.Murali | 
Mobile : +91-99430-94945
Mail ID :- [email protected]

Related Posts

error: Content is protected !!