117 புதிய எமோஜிகள் நடப்பாண்டில் அறிமுகமாக போகுது!

117 புதிய எமோஜிகள் நடப்பாண்டில் அறிமுகமாக போகுது!

இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப், பேஸ்புக் உள்ளிட்ட கலந்துரையாடல்களில் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. வார்த்தைகளை விட எமோஜிகள் மூலமாக உணர்வுகளை வெளிப்படுத்துவதை மக்கள் விரும்புகின்றனர். எளிமையாக இருப்பதாலும், பார்ப்பதற்கு வித்தியாசமாக வேடிக்கையாக இருப்பதாலும் எமோஜிகள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த ஆண்டு 117 புதிய எமோஜிகள் அறிமுகமாகியுள்ளன. இவைகள்  யூனிகோடு கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டவுடன், கூகுள், ஆப்பிள், ட்விட்டர் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்த எமோஜிகளின் பதிப்பை வெளியிட்ட உள்ளன. ஆண்டின் இரண்டாம் பகுதியில் இது கிடைக்கும் என்று தெரிகிறது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு அதிகமான பாலினத்தை உள்ளடக்கிய எமோஜிகளைப் பெற இருக்கிறோம், திருநங்கைகளின் கொடி மற்றும் சின்னம் முக்கியமாக இடம்பெற்றுள்ளது.

மேலும், குமிழி தேநீர், கட்டிப்பிடிப்பது, குழந்தைக்கு பாலூட்டுவது, நிஞ்ஜா எமோஜி உள்ளிட்டவை இடம்பெறுகின்றன. ஆனால், இவை முழுவதுமாக ஜூன் மாதத்திற்கு பிறகு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

error: Content is protected !!