சுமார் 100 கோடி மக்களின் ஆதார் விவரங்களை திருடிப்பூட்டாய்ங்கோ! – AanthaiReporter.Com

சுமார் 100 கோடி மக்களின் ஆதார் விவரங்களை திருடிப்பூட்டாய்ங்கோ!

நம் நாட்டில் தொடர்ந்து பல குழப்பங்களையும், மாற்றங்களையும் கொடுத்து ஆதாரின் வெற்றி குறித்து அறிந்த, மலேசிய அரசு, ஆதார் போன்ற திட்டத்தை தங்கள் நாட்டிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்த, மலேசிய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ஜனவரி மாதம் முதல் இந்தியாவின் சுமார் 100 கோடி மக்களின் ஆதார் விவரங்கள் திருடப்பட்டுள்ளன டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான கெமால்டோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும்  தனித்தனி எண்கள் கொண்ட 12 இலக்க அடையாள அட்டையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்து 2009-ம் ஆண்டு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை கொண்டு வந்தது. பின்னர் படிப்படியாக அரசின் பல்வேறு சலுகைகளைப் பெறுவதற்கு ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆதார் திட்டம் அரசியல் சாசனப்படி செல்லுபடியாகும் என்று உச்ச நீதிமன்றமும் தெரிவித்துள்ளது. ஆதார் மூலமாக, மக்களுக்கு வழங்கப்படும் பல்வேறு அரசின் நலத்திட்டங்கள் நேரடியாக கிடைப்பதாக மத்திய அரசு கூறி வருகிறது. இதனிடையேதான் ஜனவரி  மாதம் முதல் இந்தியாவின் சுமார் 100 கோடி மக்களின் ஆதார் விவரங்கள் திருடப்பட்டு உள்ளன டிஜிட்டல் பாதுகாப்பு நிறுவனமான கெமால்டோ அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்த ஆதார் பதிவுகளை ஹேக் செய்து திருடும் முயற்சிகள் இதுவரை 12 முறை நடந்துள்ளன. அதன் மூலமாக சுமார் 100 கோடி மக்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் திருடப்பட்டன அல்லது தொலைந்து விட்டது.

ஆனால் அந்த 12 முறை நடந்த ஹேக்கிங் முயற்சியில் ஒரு முறை திருடப்பட்ட விவரங்கள் மட்டும் தொழில்நுட்ப ரீதியாக என்க்ரிப்ட் செய்து பாதுகாக்கப்பட்டிருந்தது. அதன் காரணமாக திருடப்பட்ட விவரங்களை யாரும் பார்க்க முடியாது. ஆனால் மற்ற 11 முறை திருடப்பட்ட விவரங்கள் அவ்வாறு பாதுகாக்கப்படவில்லை என கெமால்டோவின் அறிக்கை தெரிவிக்கிறது.

மேலும் 2018ம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் உலக அளவில் 945 முறை இணையத்தளங்கள் ஹேக் செய்யப்பட்டு அதன் மூலமாக 450 கோடி பதிவுகள் திருடப்பட்டுள்ளன. இது கடந்த 2017ம் ஆண்டை விட 133 சதவீதம் அதிகம் என கெமால்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.