10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!! – AanthaiReporter.Com

10 நிமிடங்களில் 10 ஆயிரம் பாட்டில்கள் சேல்ஸ்! : அம்மா மினரல் வாட்டர் அசத்தல்!!

சென்னையில் ”அம்மா குடிநீர்” 1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ரயில்வே நிர்வாகத்தால் 15 ரூபாய்க்கும், தனியார் நிறுவனங்களால் 20 ரூபாய்க்கும் விற்கப்படும் ஒரு லிட்டர் குடிநீர், அரசு போக்குவரத்து கழக நிறுவனங்களினால் பத்தே ருபாய்க்கு கொடுப்பதால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்று தீர்ந்து பற்றாகுறை ஆனதால் ஸ்பெஷல் வேன் வைத்து மேலும் பாட்டில்களை வரவழைத்து விற்று சாதனைப் படைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளது

மலிவு விலையில் அம்மா உணவகம், காய்கறியை தொடர்ந்து மலிவு விலையில் அம்மா மினரல் வாட்டர் திட்டம் தொடங்கப்படடு குறைந்த விலையில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டியில் உள்ள சாலை போக்குவரத்து வளாகத்தில் ”அம்மா குடிநீர்” உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார்.இதை தொடர்ந்து, புறநகர் மற்றும் சென்னையில், கோயம்பேடு, பிராட்வே, அண்ணாநகர், பெருங்களத்தூர், தாம்பரம், எழும்பூர், தியாகராய நகர், ஆவடி, அம்பத்தூர், திருவொற்றியூர் உள்ளிட்ட 43 பேருந்து நிலைய விற்பனை மையங்களிலும் ”அம்மா குடிநீர்” பாட்டில் விற்பனை ஆரம்பமானது.
sep 15 - amma mineral water Bottles
1 லிட்டர் குடிநீர் பாட்டிலின் விலை 10 ரூபாய் என்பதால் மக்கள் அதிக ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். இதனால், விற்பனை தொடங்கிய 10 நிமிடங்களில் 10 ஆயிரம் குடிநீர் பாட்டில்கள் விற்று தீர்ந்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மட்டும் 5 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு மொத்தம் 1,000 பாட்டில்கள் உடனே விற்று தீர்ந்தது.
இந்நிலையில், அரசு விரைவு போக்குவரத்து கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 8 அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பிலும், அனைத்து பேருந்து நிலையங்களிலும் விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டு ”அம்மா குடிநீர்” பாட்டில்களை மக்களுக்கு கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து தொலைதூர பேருந்துகளிலும் ”அம்மா குடிநீர்” பாட்டில்கள் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர சாலையோர உணவகங்கள், ஓட்டல்களிலும் குடிநீர் பாட்டில்களை கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில் 39 விற்பனை மையங்கள், அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் 12 மையங்கள், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் (விழுப்புரம்) 69 மையங்கள், கும்பகோணம் கோட்டம் சார்பில் 54, சேலம் கோட்டத்தில் 38, கோவை கோட்டத்தில் 39, மதுரை கோட்டத்தில் 31, திருநெல்வேலி கோட்டத்தில 22 என மொத்தம் 304 விற்பனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுள்ளது.