ஏ.டி.எம். கார்ட் மூலம் 1,590 ரூபாய் பரிவர்த்தனை செய்தவருக்கு 1 கோடி பிரைஸ்!

ஏ.டி.எம். கார்ட் மூலம் 1,590 ரூபாய் பரிவர்த்தனை செய்தவருக்கு 1 கோடி பிரைஸ்!

டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு திட்டத்திற்கான, மெகா பரிசு குலுக்கல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில், ஏடிஎம் கார்டு மூலம் ரூ.1,590க்கு பரிவர்த்தனை செய்வதவருக்கு முதல் பரிசான ரூ.1 கோடி அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டு செல்லாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனையை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை ஊக்குவிக்கும் வகையில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்பவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து ரொக்கப்பரிசு வழங்கும் ‘லக்கி கிராக் யோஜனா’ மற்றும் ‘பாயின்ட் ஆப் சேல்’ ஸ்வைப்பிங் இயந்திரங்களை பயன்படுத்தும் வியாபாரிகளை ஊக்குவிக்க ‘டிஜி தன் வியாபாரி யோஜனா’ என்னும் 2 புதிய திட்டங்கள் கடந்த டிசம்பர் 25ம் தேதி தொடங்கின.

1 cr apr 10

100 நாட்கள் நடத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், ரூபே டெபிட் கார்டுகள், அரசின் மொபைல் வேலட் உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனை செய்தவர்களில் தினந்தோறும் 15 ஆயிரம் பேர் மற்றும் வாரத்திற்கு ஒருமுறை14,000 பேர் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தினசரி பரிசாக ரூ.1,000 மற்றும் வாரத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் 7 பேர் தேர்வு செய்யப்பட்டு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. இதற்கான பரிசுகள் டிஜிதன் மேளா மூலம் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின் இறுதிகட்டமான 100வது அதிர்ஷ்ட குலுக்கல் ராஷ்டிரபதி பவனில் நேற்று நடந்தது. இந்த மெகா குலுக்கலில், நவம்பர் 8ம் தேதி முதல் நுகர்வோர் மேற்கொள்ளும் அனைத்து மின்னணு பரிவர்த்தனைகளும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதிர்ஷ்டசாலிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தேர்வு செய்தார். அதன்படி, ரூபே கார்டு மூலம் ரூ.1,590க்கு பரிவர்த்தனை செய்த சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளருக்கு முதல் பரிசான ரூ.1 கோடி விழுந்திருக்கிறது. 2வது பரிசாக ரூ.50 லட்சம் பரோடா வங்கி வாடிக்கையாளருக்கும், 3வது பரிசாக ரூ.25 லட்சம் பஞ்சாப் நேஷனல் வங்கி வாடிக்கையாளருக்கும் கிடைத்திருக்கிறது. வியாபாரிகளுக்கான திட்டத்தில் முதல் பரிசாக ரூ.50 லட்சம், 2வது பரிசாக ரூ.25 லட்சம், 3வது பரிசாக ரூ.12 லட்சத்திற்கான அதிர்ஷ்டசாலிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதற்கான பரிசுத் தொகைகையை, வரும் 14ம் தேதி நாக்பூரில் நடக்கும் அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் பிரதமர் நரேந்திர மோடி வழங்க உள்ளார். பரிவர்த்தனை எண் மூலம் அதிர்ஷ்டசாலிகள் தேர்வு செய்யப்பட்டதால் வாடிக்கையாளர்களின் பெயர் உடனடியாக தெரியவில்லை. இன்று அல்லது நாளை அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படலாம் என கூறப்படுகிறது.

Related Posts

error: Content is protected !!