ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்!

ஸ்கைப்பில் எஜமானர்களோடு பேசும் நாய்கள்!

சென்­னையில் செல்­லப்­பி­ரா­ணி­களை வளர்ப்போர், வெளியூர் செல்லும்போது அவற்றை நாய்கள் காப்­ப­கத்தில் விட்டு செல்கின்­றனர். அதற்­காக தினசரி 500 ரூபாய் வாட­கையை செலுத்தி வருகின்றனர். அதே­நேரம், அவற்றை தின­சரி பார்க்க முடியாமல் வளர்த்­த­வர்களின் தவிப்பை போக்கும் விதத்தில், நாய்­களும், அவற்றின் எஜ­மா­னர்­களும், இணை­யத்தில் பேசும் புதிய முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
31 - dog skype. Mini
கைகொ­டுக்கும் இணையம்:

சென்னை உத்­தண்­டியில் நவீன நாய்கள் காப்­பகம் நடத்தி வரு­கிறார் ஷ்ரவன், 21. அவர் கூறு­கையில், பலர் தங்கள் நாய்­களை சொந்த குழந்­தையை போலவே நினைக்கின்றனர். நாயை நல்ல காப்­ப­கத்தில் விட்­டு­விட்டோம் என்ற திருப்தி இருந்­தாலும், அது எப்­படி உள்­ளது என்று தெரிந்து கொள்ள விரும்­பு­கின்­றனர். அதற்கு இணையம் கைகொடுக்­கி­றது, என்­கிறார். பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக, குறிப்­பாக, வெளி­நா­டு­க­ளுக்கு செல்ல வேண்டிய சூழல், வீட்டில் நிகழும் திருமணம் அல்லது பிற சம்பவங்கள், போன்ற பல்­வேறு சூழல்­களில், அந்த காப்­ப­கத்தில் நாய்­களை விடு­பவர்கள் பல்­வேறு கார­ணங்­க­ளுக்­காக, நாய்கள் காப்­ப­கத்தில் விடப்­ப­டு­கின்­றன.

மேலும், வெளி­நாடு மற்றும் வெளி மாநி­லங்­களில் இருந்து இந்­தி­யா­விற்கு வந்து, வீடு­ தே­டு வோரும் தங்கள் நாய்­களை இங்கே விட்டு செல்­கின்­றனர். அப்­படி கடந்த ஒரு மாதத்­திற்கு முன்பு லண்டனில் இருந்து வந்த தம்­ப­தியர், தங்களின் செல்ல நாயான ஜிப்­சி­யையும் கொண்டு வந்து இங்கு விட்­டுள்­ளனர்.
இது­கு­றித்து ஷ்ரவன் கூறு­கையில், இது லண்டனில் பிறந்து அங்­கேயே வளர்ந்த நாய். ஷீட்சூ எனப்­படும் நாய் இனத்தை சேர்ந்தவை. சென்­னையில் இப்­போது இந்த வகை நாய்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­கி­றது. இதற்கு முடி வளர்ந்து கொண்டே இருக்கும். அதை ஜடை போல் பின்னி அதன் உரி­மை­யா­ளர்கள் அழகு பார்ப்பர், என்றார். அத­னுடன், உள்ளூர் பக் வகை நாயென்று அங்­கு­மிங்கும் சுற்றி திரிந்து கொண்­டி­ருந்­தது.

பதில் எப்படி?

அவர் மேலும், கூறுகையில், இந்த பக் வகை நாயை வளர்த்­த­வரின் மனைவி, தற்­போது கேரளாவில் உள்ளார். அவர் நாயை பார்க்க ஸ்கைப் மூலம் வீடியோ காலிங்’கில் பேசுவார். அவர் அப்­போது நாயை பார்க்க விரும்­பினால், நாயை கணி­னியின் அருகில் கொண்டு செல்வேன். அவர் நாயிடம் நலம் விசாரிப்பார். அவர் கேள்வி கேட்கும் போது நாயும் பதி­லுக்கு குரைத்து பதில் சொல்லும், என்­கிறார். மேலும், எல்லா நாய்­க­ளையும் காப்­ப­கத்தில் எடுத்து கொள்­வ­தில்லை என்­கிறார் ஷ்ரவன். நாய்­க­ளுக்கு குறிப்பிட்ட காலத்தில் தடுப்பூசி போடப்­பட வேண்டும். அது­த­விர, நாயை மற்ற நாய்­க­ளு­டனும், மனி­தர்­க­ளு­டனும் பழக விட வேண்டும். நாய்­களை காப்பகத்திற்கு விட விரும்­பி­னாலும், அது ஆபத்தில்­லாத நாய் என, டாக்­டரின் கடிதம் தரப்­பட வேண்டும். மேலும், தடுப்­பூசி போடப்­பட்­ட­தற்­கான ரசீதையும் காட்ட வேண்டும். அதன்­பிறகே நாய்­களை எடுத்துக் கொள்வோம்,’’ என்றார்.

வரவேற்பு:

இந்த நாய்கள் காப்­ப­கத்­திற்கு வரவேற்பு எப்­படி இருக்­கி­றது என, கேட்­ட­போது, நாய்­களை 24 மணி நேரமும் ஏசி அறையில் முதலில் வைப்போம். பின், உணவு அளித்து பழக்­கப்­படுத்துவோம். கடந்த 6 மாதங்­களில் 600 நாய்கள் வரை வந்து போயுள்­ளன. தினசரி பரா­மரிப்பு செலவு 500 ரூபாய் என்­பதை நாய் பிரி­யர்கள் பெரிய செலவாக நினைப்­பதில்லை, என்றார்.

error: Content is protected !!