ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே ஸ்மோக் பண்ண ஸ்டூடண்டஸூக் கு அனுமதி! – பிரான்ஸ் பகீர்

ஸ்கூல் கிளாஸ் ரூமிலேயே  ஸ்மோக்  பண்ண ஸ்டூடண்டஸூக் கு  அனுமதி! – பிரான்ஸ்  பகீர்

பிரான்ஸின் பாரீஸில் கடந்த நவம்பர் மாதம் ஐ.எஸ். தீவரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பிறகு அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடைபெறலாம் என்ற பயம் மக்களிடம் நீடிக்கிறது.
france feb 7
பள்ளி வளாகத்துக்குள் புகை பிடிக்க தடை உள்ளதால், மாணவர்கள் புகை பிடிப்பதற்காக வெளியே சென்று தெருவில் கூடி நின்று புகை பிடிக்கிறார்கள். அந்த நேரத்தில் தீவிரவாதிகள் அவர்களை தாக்க கூடும் என்று பள்ளி நிர்வாகங்கள் அச்சம் அடைந்துள்ளன. இதன் காரணமாக புகை பிடிப்பவர்களுக்கான சட்ட திட்டங்களில் திருத்தம் வேண்டும் என பெரும்பாலான பள்ளி நிர்வாகங்கள் கோரிக்கை வைத்துள்ளன.இதனை அரசாங்கள் ஏற்க மறுத்துவிட்டது.

ஆனாலும் பிரான்சின் பல பள்ளிகள் தங்கள் மாணவர்களை பள்ளி வளாகத்துக்குள்ளேயே மாணவர் களை புகை பிடிக்க அனுமதி அளித்துள்ளன. புகையால் ஏற்படும் ஆபத்தை விட தீவிரவாதிகளால் அதிக ஆபத்து ஏற்படலாம் என்பதால் இந்த முடிவை எடுத்திருப்பதாக ஒரு பள்ளி நிர்வாக தெரிவித் துள்ளது.

பிரான்சில், மூன்று பங்கு இளைஞர்கள் புகைப் பழக்கம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!