ஷேக்ஸ்பியர் ஸ்டைலில் அசத்த உதவும் ஆப்ஸ்

ஷேக்ஸ்பியர்  ஸ்டைலில் அசத்த உதவும் ஆப்ஸ்

1564-ம் ஆண்டு முதல் 1616-ம் ஆண்டு வரை வாழ்ந்த ஆங்கில எழுத்தாளர். உலகின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் அறியப்படுகிறார். நகைச்சுவை மற்றும் சோகம் ஆகிய இரண்டையும் தனது நாடகத்தில் பிரதிபலித்தவர். இவரது நாடகங்கள் உலகின் பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, நடத்தப்பட்டும் வருகின்றது. இவரது படைப்புகள் ஆங்கில மொழியின் புகழ்பெற்ற படைப்புகளாக விளங்குகின்றன. 400 ஆண்டுகளுக்கு முன் உருவான இவரது படைப்புகள் இன்றும் பெரும்புகழ் பெற்று உலக மக்களால் போற்றப்படுகின்றன.
app apr 11
சாம்பிளுக்கு ( தமிழில்)

> அளவுக்கு மீறிய நல்ல விஷயங்கள் கெட்ட விஷயங்களாகவே மாறுகின்றது.

> துன்பங்கள் வரும்போது தனியாக வருவதில்லை, அவை மொத்தமாகவே வருகின்றன.

> நீங்கள் கண்ணீருடன் இருந்தால், இப்பொழுதே அதை சிந்த தயாராக இருங்கள்.

> பொற்காலம் என்பது நமக்கு முன்னாள் உள்ளதே தவிர நமக்கு பின்னால் இல்லை.

> நல்லது அல்லது கெட்டது என்று எதுவும் இல்லை, நமது எண்ணமே ஒரு விஷயத்தை அவ்வாறு மாற்றுகின்றது.

> வைத்துக்கொள்ள எதுவும் இல்லையென்றால் இழப்பதற்கும் எதுவுமில்லை.

> எல்லோரிடமும் அன்பு செலுத்துங்கள், சிலரிடம் நம்பிக்கை வையுங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.

> பாவத்தினால் சிலர் உயர்கிறார்கள், நேர்மையினால் சிலர் வீழ்ச்சி அடைகிறார்கள்.

> ஒரு நிமிட தாமதத்தை விட, குறித்த நேரத்திற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பு செல்வது சிறந்தது.

> ஒரு தவறான சண்டையில் உண்மையான வீரம் இருக்க முடியாது.

> எது செய்து முடிக்கப்பட்டதோ, அதை ஒருபோதும் மாற்ற முடியாது.

> பலவற்றை கேளுங்கள், ஒரு சிலவற்றை மட்டும் பேசுங்கள்.

இங்கிலீஷ்

To be, or not to be: that is the question. (Hamlet)

All the world ‘s a stage, and all the men and women merely players. They have their exits and their entrances; And one man in his time plays many parts. (As You Like it)

Romeo, Romeo! wherefore art thou Romeo? (Romeo and Juliet)

Now is the winter of our discontent. (Richard III)

s this a dagger which I see before me, the handle toward my hand? (Macbeth)

Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon them. (Twelfth Night)

ds die many times before their deaths; the valiant never taste of death but once. (Julius Caesar)

Full fathom five thy father lies, of his bones are coral made. Those are pearls that were his eyes. Nothing of him that doth fade, but doth suffer a sea-change into something rich and strange. (The Tempest)

A man can die but once. (Henry IV, Part 2)

How sharper than a serpent’s tooth it is to have a thankless child! (King Lear)

❣❣❣இப்பிடி நீங்களும் ஷேக்ஸ்பியர் மொழி நடையில் ஆங்கில புலமையுடன் மின்னஞ்சலோ குறுஞ்செய்தியோ யாருக்கேனும் அனுப்பணுமுன்னு ஆசையா? டோண்ட் ஒர்ர்ரி.

இதுக்குன்னே போன வியாழக்கிழமை அன்று ஒரு புதிய செயலியை அலைபேசி பயனாளர்களுக்காக அறிமுகப் படுத்தி உள்ளார்கள். அதன் பெயர் ஷேக்ஸ்பீக் என்பதாகும்.

இதை உங்கள் செல்போனில் எளிதில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அலைபேசியில் உள்ள தட்டச்சு பலகையில் நீங்கள் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்யும் போதே அந்த வாக்கியத்தின் மற்ற வார்த்தைகளை அது எடுத்துத் தரும். 2016 ஆம் ஆண்டில் ஷேக்ஸ்பியர் இறந்து நானூறு வருடம் முடிகிறது. 2008 ஆண்டு நிறுவப்பட்ட ஸ்விஃப்ட் கீ நிறுவனம் அதை முன்னிட்டே இந்த செயலியை பல ஆராய்ச்சிக்களுக்குப் பின் தற்போது லண்டனில் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது

அலைபேசியில் உள்ள தட்டச்சு பலகையில் நீங்கள் குறுஞ்செய்தியை தட்டச்சு செய்யும் போதே அந்த வாக்கியத்தின் மற்ற வார்த்தைகளை அது எடுத்துத் தரும். 2016 ஆம் ஆண்டில் ஷேக்ஸ்பியர் இறந்து நானூறு வருடம் முடிகிறது. 2008 ஆண்டு நிறுவப்பட்ட ஸ்விஃப்ட் கீ நிறுவனம் அதை முன்னிட்டே இந்த செயலியை பல ஆராய்ச்சிக்களுக்குப் பின் தற்போது லண்டனில் வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது.

ஸ்விஃப்ட் கீ நிறுவனத்தின் வல்லுனர்கள் இதற்காக வில்லியம் ஷேக்ஸ்பியரின் படைப்புக்கள் அனைத்தையும் பல முறை படித்தனர். ஷேக்ஸ்பியருக்கே உரிய பல பிரத்யேக வார்த்தைகளின் பயன்பாடுகளையும் இந்த செயலியில் வடிவமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு.

இந்த செயலியைப் பயன்படுத்தினால் தரமும் செறிவுமான ஒரு ஆங்கில உரையை உருவாக்கிவிடலாம். ஒரு போலி ஷேக்ஸ்பியராகவே நாம் உருவெடுக்கலாம். உதாரணமாக ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற வசனமான To be என்ற சொற்களை நீங்கள் டைப் செய்தால், அது உடனே அடுத்த வார்த்தைகளான Or not to be என்பதைத் தானாகவே எடுத்துக் காட்டும். அதே போல ‘இந்த உலகம்’ என்று நீங்கள் தட்டச்சினால் அடுத்த வரியான ‘ஒரு நாடக மேடை. இதில் ஆண்கள் பெண்கள் என அனைவருமே பாத்திரப்படைப்புகள்’ என்று அந்த வாக்கியத்தை முழுமையாக்கும்.

இது குறித்து ஸ்விஃப்ட் கீ நிறுவனத்தின் ஒரு தலைவரான சாரா ரவுலிங் கூறுகையில், ‘இந்த ஸ்மார்ட் ஃபோன் மூலம் ஷேக்ஸ்பியர் கண்டு அடைந்த எண்ணற்ற சொற்களை நீங்களும் பயன்படுத்தலாம். காலம் பல தாண்டியும் மிகவும் தனித்துவமாக விளங்கும் அந்த மகாகவியின் தேர்ந்த மொழிநடையும், நுட்பமான வாக்கிய அமைப்புக்களையும் அனைவரும் பயன்படுத்தி ஆங்கில மொழியில் அழகியல் சொற்களை உருவாக்கி மகிழலாம்.’ என்றார்.

error: Content is protected !!