வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கினார்!

வைகை ஆற்றில்  கள்ளழகர் இறங்கினார்!

சித்திரைத்திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக கள்ளழகர் இன்று காலை வைகை ஆற்றில் இறங்கினார்.அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுவதால் அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்ததால்.மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
madurai kallalagar 1
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலையும், மதுரை அருகே உள்ள அழகர்கோவிலையும் இணைத்து, சைவமும், வைணவமும் ஒருங்கிணைந்த பெருவிழாவாக சித்திரை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. மதுரை மாநகரில் மாதம்தோறும் திருவிழா நடைபெற்று வந்தாலும், சித்திரைத் திருவிழா வரலாற்று பெருமை பெற்றதாகும்.

இந்த ஆண்டு சிறப்பு மிக்க சித்திரைத் திருவிழா கடந்த 1–ந் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைதொடர்ந்து தினமும் மீனாட்சி அம்மனும், சுந்தரேசப்பெருமான்– பிரியாவிடையுடனும் பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்தனர்.

மீனாட்சிஅம்மன் கோவில் திருவிழாவில் 8–ந் தேதி பட்டாபிஷேகமும், 9–ந்தேதி ‘திக்’ விஜயமும் நடந்தன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன்– சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த சனிக்கிழமை கோலாகலமாக நடந்தது. அதைத் தொடர்ந்து 12–ந்தேதி தேரோட்டம் நடைபெற்றது.

இதன் முத்தாய்ப்பு நிகழ்வாக இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார். அதன்பின் 3 மணிக்கு தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார்.

இன்று காலை 6 மணிமுதல் 6.30 மணிக்குள் தங்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகினார். அதற்குமுன்பே அங்கு வீரராகவப் பெருமாள் வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் அந்த கண்கொள்ளா காட்சியை கண்டு தரிசிப்பதை பக்தர்கள் பெரும் பாக்கியமாக கருதுகின்றார்கள். அந்த உன்னத நிகழ்வை காண மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தேனி மாவட்டங்கள் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுமார் 10 லட்சம் பக்தர்கள் அதிகாலை முதலே மதுரை மாநகரில் குவிந்தனர். அதனால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. வைகை ஆற்றில் இறங்கியதை பக்தர்தகள் வழிபட்டனர். வைகை ஆற்றில் நேற்று இரவு முதலே பக்தர்கள் கூட தொடங்கினார்கள். கள்ளழகர் வேடம் அணிந்த பக்தர்கள் விடிய, விடிய கள்ளழகரை வர்ணனை செய்து ஆடிப்பாடி மகிழ்ந்தனர்.

error: Content is protected !!