விஷால் + காஜல் நடித்த ‘பாயும் புலி’ ஆடியோ வெளியீட்டு விழா ஆல்பம் + டிரைலர்!

விஷால் + காஜல் நடித்த ‘பாயும் புலி’ ஆடியோ வெளியீட்டு விழா ஆல்பம் + டிரைலர்!

விஷால், காஜல் அகர்வால், சூரி, ஆனந்தராஜ், ஜெயபிரகாஷ், அர்.கே. மனோஜ் குமார், அப்புக்குட்டி, அருள்தாஸ், ஐஸ்வர்யா தத்தா முதலானோர் நடித்துள்ள படம் ‘பாயும்புலி’. வேந்தர் மூவீஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மதன் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார். சுசீந்திரன் இயக்கத்தில் தயாரான இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள சத்யம் தியேட்டரில்  நடைபெற்றது. படத்தின் பாடல்களை பாரி வேந்தர் வெளியிட, கோவையை சேர்ந்த ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் உரிமை யாளரும், ஆடு, மாடு, நாய் என வாயில்லா ஜீவன்களுக்காக ஒரு அமைப்பை நிறுவி அதன் மூலம் சேவை செய்து வரும் சிவா பெற்றுக்கொண்டார்.

வழக்கமான ஆடியோ விழாக்கள் மாதிரி இல்லாமல் ‘பாயும் புலி’ படத்தின் ஆடியோ விழா கொஞ்சம் வித்தியாசமாக நடைபெற்றது. அதன் முக்கிய சாராம்சங்கள் இதோ:

கலாமுக்கு அஞ்சலி!

விழா துவக்கத்தில் மறைந்த குடியரசு தலைவரும், அணுசக்தி விஞ்ஞானியுமான அப்துல் கலாம்  திரு உருவ படத்தை திறந்து வைத்து அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

பொக்கேக்கு பதில் புத்தகங்கள்!

விழாவுக்கு வந்த முக்கியஸ்தர்களை வழக்கமாக பூகொத்து கொடுத்து வரவேற்பார்கள்! ஆனால் இந்த விழாவுக்கு வந்தவர்களுக்கு பூங்கொத்துக்கு பதிலாக அப்துல் கலாம் எழுதிய ‘அக்னி சிறகுகள்’ புத்தகம் வழங்கபட்டது.

கல்வி உதவி!

சென்னையை சேர்ந்த இரண்டு மாணவிகளுக்கு கல்வி பயில உதவியாக விஷால் சார்பில் பண உதவி வழங்கப்பட்டது.

சுசீந்திரனுக்கு விருது!

தயாரிப்பாளர்களின் கஷ்ட நஷ்டங்களை அறிந்து திட்டமிட்டு படமெடுத்து, வெற்றிப் படங்களை வழங்கி வரும் இயக்குனர் சுசீந்திரனுக்கு ‘THE BEST PRODUCER’S DIRECTOR OF THIS YEAR (2015)’ என்ற விருது வழங்கப்பட்டது. இந்த விருதை முன்னாள் ஃபிலிம் சேம்பர் தலைவர் கல்யாண், சுசீந்திரனுக்கு வழங்கினார்.


‘முயல் குட்டி’ காஜல் தமிழ் குட்டியாக வேண்டும்!

‘பாயும் புலி’க்கு பாடல்கள் எழுதியிருக்கும் கவிஞ்ர வைரமுத்து பேசும்போது, ‘‘சுசீந்திரன் தயரிப்பாளர்களின் இயக்குனர் என்றால் விஷால் தயாரிப்பாளர்களின் நடிகர்! இவர்கள் இருவரிடத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை எல்லோரும் பின்பற்றலாம். சுசீந்திரன் எல்லா நடிகர்களுடனும் படம் பண்ண வேண்டும். அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டின் பெரும் கலைஞர் களான விஜய், அஜித், சூர்யா போன்ற ஹீரோக்கள் கண்டிப்பாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க வேண்டும்! இந்த படத்தில் காஜல் அகர்வாலுக்காக ‘முயல் குட்டி…’ என்று துவங்கும் ஒரு பாடலை எழுதியிருக்கிறேன். காஜல் அகர்வால் இங்கு பேசும்போது ஆங்கிலத்தில் பேசினார். அவர் தமிழ் சினிமாவின், தமிழ் ரசிகர்களின் நடிகையாகி விட்டார். இனி வரும் பட விழாக்களில் ‘முயல் குட்டி’ காஜல், தமிழ் குட்டியாக பேச வேண்டும்’’ என்றார்.

அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை!

விழாவில் விஷால் பேசும்போது, ‘‘என் தாயை நேசிப்பது போன்று சினிமாவை நேசிப்பவன் நான். அதனால் தான் சினிமாவுக்கு ஒரு பாதிப்பு என்றால் எனக்கு கோபம் வருகிறது. அது சம்பந்தமான விஷயங்களில் ஈடுபடுகிறேன். இதை நான் பப்ளிசிட்டிக்காக, அரசியலுக்கு வருவதற்காக செய்வ தாக சொல்கிறார்கள்! ஆனால் நிச்சயமாக எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் கிடையாது. சினிமாவும், சமூகமும் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக என் மனதுக்கு பட்டதை செய்கிறேன், சொல்கிறேன். இந்த தருணத்தில் எல்லோருக்கும், அதிலும் குறிப்பாக என் ரசிகர்களுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை சொல்லிக் கொள்கிறேன். எல்லோரும் அப்துல் கலாம் ஐயாவின் கனவை நிறைவேற்றும் விதமாக செயல்படுங்கள்! இந்த மேடையில் இரண்டு மாணவிகளுக்கு படிக்க பண உதவி செய்ததை போன்று இனி வரும் காலங்களில், அதாவது என் உயிர் இருக்கும் வரை என்னால் முடிந்த வகையில் கல்விக்காக உதவி செய்ய இருக்கிறேன்’’ என்றார்.

 

error: Content is protected !!